மதுசூதனனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தைத் தொடங்கிய  இபிஎஸ் – ஓபிஎஸ்…. சூடு பிடிக்கும் ஆர்.கே.நகர் தேர்தல் களம் !!

 
Published : Dec 07, 2017, 12:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
மதுசூதனனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தைத் தொடங்கிய  இபிஎஸ் – ஓபிஎஸ்…. சூடு பிடிக்கும் ஆர்.கே.நகர் தேர்தல் களம் !!

சுருக்கம்

election compain eps and ops

சென்னை ஆர்.கே.நகரில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ம்  இன்று தங்களது தோத்ல் பிரச்சாரத்தை தொடங்கினர்.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அந்த தொகுதியில் கடந்ம ஏப்ரல் மாதம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின்போது சில வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக எழுந்த புகாரையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் வரும் 21 ஆம் தேதி ஆர்,கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்  திமுக சார்பில் மருது கணேசும்,அ.தி.மு.க. வேட்பாளராக மதுசூதனனும் பா.ஜ.க. வேட்பாளராக கரு.நாகராஜனும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கலைக்கோட்டுதயமும், சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி.தினகரனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர்  மதுசூதனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று தேர்தல் பிரசாரத்தைர் தொடங்கியுள்ளனர்.

கொருக்குப் பேட்டை மற்றும் ஹரிநாராயணபுரம் பகுதிகளில்  திறந்த வேனில் சென்று மதுசூதனனுக்கு ஆதரவாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தீரி ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.

அவர்களுடன் அமைச்சர்கள் ஜெயகுமார், விஜய பாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் அவர்களுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக சூரியநாராயணன் செட்டி தெரு. அருள் நாராயணபுரம் ஆகிய இடங்களில் உள்ள தேர்தல் பணிமனைகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

திமுக வேட்பாளர் மருது கணேஷ் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் அவரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

டி.டி.வி.தினகரனுக்கு இதுவரை தேர்தல் பிரச்சாரம் செய்ய இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!