நாடாளுமன்ற தேர்தல் தேதி எப்போ அறிவிக்கப் போறாங்க தெரியுமா ? தேர்தல் ஆணையம் தகவல் !!

By Selvanayagam PFirst Published Jan 18, 2019, 7:46 PM IST
Highlights

இந்திய நாடாளுமன்றத்துக்கு வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2014 ஆம் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் மே மாதத்துடன் 5 ஆண்டு ஆட்சி நிறைவு பெறுகிறது.

இதையடுத்து மே மாதம் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் பணிகளை  முடுக்கி  விட்டுள்ளன. பிரதமர் நரேந்தி மோடி கடந்த வாரத்தில் கேரளாவில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது.

இதே போல் வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்சார வியூகத்தை வகுத்து வருகிறார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது போன்ற பல ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

இதனிடையே வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்தியா முழுமைக்குமான நாடாளுமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!