தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப்பிடி..! பணத்தை வெளியே எடுக்க முடியாமல் திணறும் திமுக கூட்டணி வேட்பாளர்கள்..!

By Selva Kathir  |  First Published Apr 3, 2019, 9:41 AM IST

திமுக கூட்டணி வேட்பாளர்களை தேர்தல் பணியாளர்கள் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து வருவதால் அன்றாட செலவுக்கு கூட பணம் எடுக்க முடியாமல் அவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


திமுக கூட்டணி வேட்பாளர்களை தேர்தல் பணியாளர்கள் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து வருவதால் அன்றாட செலவுக்கு கூட பணம் எடுக்க முடியாமல் அவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் பணியாளர்கள் களத்தில் இறங்கினர். அனைத்து தொகுதிகளிலும் 24 மணி நேரமும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. துவக்கத்தில் இந்த சோதனை ஆளும் மற்றும் எதிர்க்கட்சி இரண்டு பேருக்குமே எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனால் ஆளும் கட்சி வேட்பாளர்கள் தங்களின் அதிகாரத்தை சாதகமாக பயன்படுத்தி எவ்வித பிரச்சனையும் இல்லாமல் தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்று வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

ஆனால் திமுக கூட்டணி வேட்பாளர்கள் செல்வந்தர்களான ஒருசில வேட்பாளர்களைத் தவிர மற்ற வேட்பாளர்களிடம் பணப்புழக்கம் இல்லை என்று அவர்கள் கட்சியினரே புலம்புகின்றனர். உதாரணத்திற்கு சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்குஆதரவாக தேர்தல் பணியாற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு தற்போது வரை ஒரு பைசா கூட செல்லவில்லை என்று சொல்கிறார்கள். 

இதே நிலைதான் ஈரோட்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணேசமூர்த்திக்கும் என்று பேசிக்கொள்கிறார்கள். இதுதவிர அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் தொகுதிகளில் தேர்தல் பணியா ளர்கள் திமுக வேட்பாளர்களை எந்த நேரமும் பின்தொடர்ந்து சென்று அவர்களின் பிரச்சாரத்தைக் கூட கண்காணிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் வேட்பாளர்கள் கையில் பணம் இருந்தாலும் கூட அதனை எடுத்து செலவழிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 

தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பணம் கொடுக்க வேண்டியது மிக முக்கியமான ஒரு செயல்முறை. இதனை திமுக செய்துவிடக்கூடாது என்று ஆளும் கட்சி கருதுவதால் அக்கட்சியின் வேட்பாளர்கள் மீதான கண்காணிப்பு மேலும் அதிகமாக உள்ளதாக கூறுகிறார்கள். இந்த கண்காணிப்பின் விளைவாகத்தான் வேலூர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு என்றும் சொல்கிறார்கள். கடந்த 2011 மற்றும் 2014 தேர்தலிலும் திமுக விற்கு இதே நிலைதான் ஏற்பட்டது. தற்போதும் அதே நிலை மறுபடியும் உருவாகியுள்ளதால் திமுக வேட்பாளர்களும் உயர்மட்ட நிர்வாகிகளும் கைகளை பிசைந்து வருகின்றனர்.

click me!