தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் - அதிமுகவின் இரு அணிகளின் பெயர் பட்டியல் வெளியீடு

 
Published : May 11, 2017, 04:07 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் - அதிமுகவின் இரு அணிகளின் பெயர் பட்டியல் வெளியீடு

சுருக்கம்

election commission organise all party meeting

மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்பது தொடர்பாக வரும் 12 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது தேர்தல் ஆணையம். இதில் கலந்து கொள்வோரின் பெயர்களை அதிமுகவின் இரு அணிகளும் வெளியிட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன்பு உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பாலான மாநிலகளின் கூட்டணி பலங்களுடன் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க.

இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குபதிவின் போது முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை திரும்ப பெற்றுக்கொண்டு பழைய வாக்கு சீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின.

இதற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம் மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை எனவும், முடிந்தால் அதை நிரூபித்து காட்டுங்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இதை நிரூபிக்கும் வகையில் வரும் 12 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது. இதில் அதிமுகவை சேர்ந்த இரு அணிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இதைதொடர்ந்து இரு அணிகள் சார்பில் பங்கேற்க உள்ள நிர்வாகிகளின் பெயர்க்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஒ.பி.எஸ் அணி சார்பில் அவரது தலைமையில், மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

எடப்பாடி அணி சார்பில், தம்பிதுரை, தளவாய்சுந்தரம், கே.கே வேணுகோபால் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும் திமுக சார்பில் திருச்சி சிவாவும், டி.கே.எஸ் இளங்கோவனும் கலந்து கொள்கின்றனர்.

இதனிடையே  மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் எளிதில் முறைகேடு செய்ய முடியும் என்று டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சவுரவ் பரத்வாஜ் நேரடியாக செய்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!