மோடியிடம் சரண் அடைந்த தேர்தல் ஆணையம் கெஜ்ரிவால் கடும் தாக்கு

Asianet News Tamil  
Published : Feb 04, 2017, 07:53 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
மோடியிடம் சரண் அடைந்த தேர்தல் ஆணையம் கெஜ்ரிவால் கடும் தாக்கு

சுருக்கம்

தேர்தலில் முறைகேடு புகார்களை கண்டு கொள்ளாமல், பிரதமர் மோடியிடம் தேர்தல் ஆணையம் சரண் அடைந்துவிட்டதாக, கெஜ்ரிவால் தாக்குதல் தொடுத்து இருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் 117 சட்டசபை தொகுதிகளுக்கும், கோவாவிலிருக்கும் 40 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

குற்றச்சாட்டு

இந்த ஓட்டுப்பதிவில் தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு மாறாக கட்சி சின்னங்கள் மற்றும் இதர பிரசார பொருட்களுடன் வாக்குச்சாவடிக்கு வருதல், வாக்குப்பதிவு நாளன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தல் ஆகியவற்றில் பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபடுவதாக பரவலாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கு கண்டனம் தெரிவித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

ரிசர்வ் வங்கி மற்றும் சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளை போன்று தேர்தல் ஆணையமும் மோடியிடம் முழுமையாக சரணடைந்து விட்டது. இந்த தேர்தலை ஆணையமானது, முறைகேடு புகார்களை கண்டு கொள்ளாமல் வெட்கமற்ற , முதுகெலும்பற்ற அமைப்பாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை.. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்: கே.சி. வேணுகோபால்