பள்ளிக்குழந்தைகளுடன் ஜாலி மூடில் உரையாடிய ஸ்டாலின்

Asianet News Tamil  
Published : Feb 04, 2017, 06:35 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
பள்ளிக்குழந்தைகளுடன் ஜாலி மூடில் உரையாடிய ஸ்டாலின்

சுருக்கம்

கொளத்தூரில் மரங்களை நட்ட ஸ்டாலின் பின்னர்   அங்குள்ள பள்ளிகளில் குழந்தைகளுடன் உரையாடினார். அவர்களுடன் மகிழ்ச்சியாக தனது பொழுதை கழித்தார். மாணவ மாணவியர் அவருடன் கைகுலுக்கினர்.  அப்போது மாணவ மாணவியர் வைத்த கோரிக்கையை கேட்டுக்கொண்டார். அதை நிறைவேற்றுவதாக கூறினார்.

இது குறித்து தனது முகநூலில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்  வர்தா புயலால் விழுந்த மரங்களுக்கு பதிலாக, ஒரு வட்டத்திற்கு 200 மரக்கன்றுகள் என்று சுமார் 1500 மரங்கள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தேன் .

தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மக்கள் குறை கேட்டு பிறகு, பள்ளிகளில் ஆய்வு செய்து அங்குள்ள மாணவ, மாணவிகளிடம் உரையாற்றினேன். 

"கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும், கழிப்பறைகள் அமைத்துத் தர வேண்டும், ஸ்மார்ட் ரூம் அமைத்துத் தர வேண்டும், ஆரோ பிளான்ட் (RO Plant) வேண்டும், கம்ப்யூட்டர் வசதி போன்ற பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை என்னிடத்தில் எடுத்து வைத்திருக்கிறார்கள். 

சட்டமன்ற உறுப்பினர் தொகுதியினுடைய மேம்பாட்டு நிதியிலிருந்து என்னால் முடிந்தவரையில் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற பணியில் நான் நிச்சயமாக ஈடுபடுவேன் என்று உறுதி தந்திருக்கிறேன். 

ஒருவேளை, சில விதிமுறைகளின் கீழ் அந்தப் பணிகளுக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியை பயன்படுத்த முடியவில்லை என்றால், என்னுடைய சொந்த நிதியிலிருந்து போதிய நிதி வழங்கி, அவர்களது கோரிக்கைகளை நான் நிவர்த்தி செய்வதாக" உறுதியளித்துள்ளேன். இவ்வாறு ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை.. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்: கே.சி. வேணுகோபால்