இபிஎஸ் கோரிக்கை தேர்தல் ஆணையமே ஏற்கவில்லை! பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதியுங்க.. ஓபிஎஸ் அணியினர் வாதம்.!

By vinoth kumarFirst Published Mar 19, 2023, 11:34 AM IST
Highlights

ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற வாதத்தை முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, வைத்திலிங்கம் தரப்பில் பொதுச்செயலாளர் தேர்தலில் ஜனநாயக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. 

பொதுச்செயலாளர் பதவி தொடர்பான தீர்மானத்தை ஏற்க வேண்டும் என்ற இபிஎஸ்-ன் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என ஓபிஎஸ் அணியினர் வாதங்களை முன்வைத்துள்ளனர். 

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, ஓபிஎஸ் அணியினர் தரப்பில்;- பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் பதிலளிக்க அவகாசம் பெற்று மாலை தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்து விட்டு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பொதுச்செயலாளர் பதவி தொடர்பான தீர்மானத்தை ஏற்க வேண்டும் என்ற இபிஎஸ்-ன் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. தேர்தல் ஆணையம் இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கே கடிதங்கள் அனுப்புகிறது. ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற வாதத்தை முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, வைத்திலிங்கம் தரப்பில் பொதுச்செயலாளர் தேர்தலில் ஜனநாயக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. 

மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 ஆண்டுகள் உறுப்பினர், 5 ஆண்டுகள் தலைமை கழக நிர்வாகியாக இருக்க வேண்டும் என்பது தகுதி. இந்த விதி திருத்தப்பட்டுள்ளது. இதனால் சாதாரண தொண்டன் இந்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 36 மணிநேரத்தில் 20 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிதல், வழிமொழிதல் என அறிவிக்கப்பட்டிருப்பது எப்படி சாத்தியமாகும்? இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால் பிரதான வழக்கே செல்லாதாகி விடும். எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஓபிஎஸ் அணியினர் வாதத்தை முன்வைத்தனர். 

click me!