அதிமுகவின் வேட்பாளருக்கான ஏ மற்றும் பி பவடிவங்களில் தமிழ் மகன் உசைன் கையெழுத்திட இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
அதிமுகவின் வேட்பாளருக்கான ஏ மற்றும் பி பவடிவங்களில் தமிழ் மகன் உசைன் கையெழுத்திட இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்.27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் போட்டியிடும் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். அந்த வகையில் அதிமுக சாபில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் வேட்பாளரை அறிவித்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசவும், ஓபிஎஸ் தரப்பில் எம்.பி.ஏ. பட்டதாரியான செந்தில் முருகன் என்பவரும் அறிவிக்கப்பட்டனர். இதனால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்.. இபிஎஸ் - ஓபிஎஸ்ஸுக்கு பறந்தது நோட்டீஸ் - அதிமுகவை துரத்தும் சர்ச்சை!
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய உத்தரவிட்டதோடு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் அதிமுக வேட்பாளர் விவரத்தை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது. அதன்படி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் படிவங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று சமர்பித்தார். அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அளித்த பொதுக்குழு உறுப்பினர்களின் படிவங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், அதிமுக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் அங்கீகரிக்கப்படுகிறார்.
இதையும் படிங்க: நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் தாமதம் கூடாது... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!
குறுகிய காலத்திற்கு அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திட அவைத்தலைவருக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது. இதன்படி, தேவையான நடவடிக்கைகளை ஈரோடு கிழக்குத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுக்குறித்து ஈரோடு கிழக்குத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாருக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதமும் அனுப்பியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியுள்ளது.