
ஆர். கே நகர் தொகுதியில், வரும் 12 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளதால், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் குறித்த விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது .
அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 10ம் தேதி மாலை 5 மணி முதல், 12-ம் தேதி மாலை 5 மணி வரை பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .
இதே போன்று, வரும் 10ம் தேதி மாலை 5 மணி முதல் 12-ம் தேதி மாலை 5 மணி வரை திரைப்படம், தொலைக்காட்சி, ரேடியோ, சமூகவலைதளங்களிலும் எந்த பிரச்சாரமும் செய்ய கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரம் செய்ய கால அவகாசம் இன்னும் சரியாக 2 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்களின் பிரச்சாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது .
ஏற்கனவே பணபட்டுவாடா உள்ளிட்ட பல பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில் , அடுத்து வரும் இரண்டு நாட்களில் ஆர் கே நகரில் எந்தெந்த மாற்றம் வருமோ என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது .