தேர்தல் பரபரப்பு..! டென்சனில் சசிகலா..! ரிலாக்ஸ் பண்ண தஞ்சை பயணம்..! ஏமாற்றத்தில் டிடிவி..!

Published : Mar 19, 2021, 11:14 AM ISTUpdated : Mar 19, 2021, 12:23 PM IST
தேர்தல் பரபரப்பு..! டென்சனில் சசிகலா..! ரிலாக்ஸ் பண்ண தஞ்சை பயணம்..! ஏமாற்றத்தில் டிடிவி..!

சுருக்கம்

சசிகலாவை முன்னிறுத்தி சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க மின்னல் வேகத்தில் தயாராகி வந்தார் டிடிவி தினகரன். ஆனால் திடீரென அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு வீட்டுக்குள் முடங்கிவிட்டார் சசிகலா.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிகலா திடீரென தஞ்சை புறப்பட்டுச் சென்றதால் டிடிவி தினகரன் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

சசிகலாவை முன்னிறுத்தி சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க மின்னல் வேகத்தில் தயாராகி வந்தார் டிடிவி தினகரன். ஆனால் திடீரென அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு வீட்டுக்குள் முடங்கிவிட்டார் சசிகலா. இதனால் தனது தேர்தல் வியூகம் தவிடு பொடியான நிலையில் மனம் தளராமல் தொடர்ந்து தேர்தல் களத்தில் உள்ளார் டிடிவி தினகரன். இதுநாள் வரை சென்னையில் இருந்த சசிகலா திடீரென நேற்று முன்தினம் தஞ்சை புறப்பட்டுச் சென்றார். அங்கு உள்ள வீட்டில் தற்போது அவர் முழு ஓய்வில் உள்ளார். அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்க இயலாது என்று சசிகலா திட்டவட்டமாக கூறி வருகிறார்.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே சசிகலா வீட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நண்பர்களாக இருந்து அரசியல் களத்தில் இருப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கும் வீட்டுக்குள் அனுமதி இல்லை. இதனால் தஞ்சை வந்த பிறகு சின்னம்மாவை சந்திக்கும் ஆவலுடன் இருந்த அமமுக நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசியல் தவிர்த்துவிட்டு முழுக்க முழுக்க கோவில்களுக்கு ஆன்மிகப் பயணம் தான் சசிகலா மேற்கொண்டு வருகிறார். சென்னையில் தேர்தல் பரபரப்பு உள்ளதால் தான் மன அமைதி மற்றும் ரிலாக்ஸாக இருக்க அவர் தஞ்சை சென்றதாக சொல்கிறார்கள்.

முதல் நாளே திருவிடைமருதூர் கோவிலுக்கு வந்த சசிகலா அங்கு ரேவதி பூஜை செய்து வழிபட்டார். இது மன அமைதி கிடைக்க செய்யப்படும் பூஜையாகும். இந்த தகவல் அறிந்து கோவில் முன்பு அமமுக நிர்வாகிகள் சிலர் கூடினர். ஆனால் அவர்களை எல்லாம் கலைந்து போகச் செய்துவிட்டே சசிகலா கோவிலுக்குள் இருந்து வெளியே வந்தார். தேர்தல் முடியும் வரை இதே போல் கோவில் கோவிலாக செல்லும் திட்டத்தில் உள்ள சசிகலா சில முக்கிய கோவில்களில் ரகசிய பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்து வருகிறார். எனவே தேர்தல் முடிந்த பிறகுஅதாவது தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக அவர் சென்னை திரும்புவார் என்கிறார்கள்.

இதனிடையே சசிகலா கடைசி நேரத்தில் மனம் மாறுவார் என்று டிடிவி தினகரன் காத்திருந்தார். மேலும் தேர்தல் செலவுகளுக்கும் சசிகலாவை சில விஷயங்களில் அவர் நம்பியிருந்தார். ஆனால் இனி தேர்தல் முடியும் வரை தன்னை பார்க்க வர வேண்டாம் என்று கண்டிப்புடன் சசிகலா கூறியிருந்தாக சொல்கிறார்கள். ஆனாலும் கூட சசிகலாவை சந்திக்க இரண்டு மூன்று முறை தினகரன் முயன்றதாகவும் ஆனால் சசிகலா அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறுகிறார்கள். ஒரு கட்டத்தில்பொறுமை இழந்து தான் சசிகலா சென்னையில் இருந்து தஞ்சைக்கு சென்றதாகவும் பேச்சு அடிபடுகிறது.

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியது தினகரனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் சசிகலா சென்னையை காலி செய்துவிட்டு தஞ்சை சென்றது அவரை இன்னும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க தேவை அதிகரிக்கும் நிலையில் அதனை ஈடுகட்ட பணம் இல்லாத காரணத்தினால் தற்போது என்ன செய்வது என்று டென்சனில் இருந்து வருகிறாராம் டிடிவி தினகரன்.

PREV
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!