நான் அரசியலில் இறங்கப் போதில்லை…எம்எல்ஏ ஆகப்போவதில்லை…. ஆனால் பாஜகவை வீழ்த்தியே தீருவேன் !!  பிரகாஷ் ராஜ் ஆவேசம்…

First Published May 5, 2018, 8:03 AM IST
Highlights
Election campaign in karanataka by prakash raj


பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய ராட்சசன் என்றும் பாஜகவையும், அதன் ஆட்சியையும் இந்தியாவைவிட்டு அகற்றுவதே தன்னுடைய குறிக்கோள் என்று நடிகர் பிரகாஷ் ராஷ் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வரும் 12 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது, இதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜூம், குஜராத் மாநில சுயேட்சை எம்எல்ஏ ஜிக்மேனஷ் மேவானி ஆகியோர் கர்நாடக மாநிலம் முழுவதும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், எழுத்தாளர் கவுரி லங்கேஷின் மரணம் என்னைமாற்றியதா? என்றால், ஆம் கவுரி மரணம் என்னை மாற்றியது. மாற்றியது என்பதைவிட என்னை உலுக்கியது. அவர் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார். அவரின் குரல் அடங்கிய போது, அது என்னைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கியது. நாம் எல்லோரும் அவரை தனியாக போராட வைத்துவிட்டோம் என தெரிவித்தார்.

ஆனால் இப்போது  நான் பேச ஆரம்பித் துள்ளேன். ஆனால், என் குரலை இப்போது நிறுத்த பார்க்கிறார்கள். இதை செய்வது வேறு யாரும் இல்லை.பாஜக மட்டும்தான். மோடியிடம் நீங்கள்கொடுத்த வாக்குறுதி என்ன ஆகிவிட்டது என்று கேட்டால், உடனே அவர்நேருவை பற்றி பேசுகிறார்; திப்பு சுல்தான் பற்றி பேசுகிறார்; 100 வருடங்களுக்கு முன்பு நடந்ததை பேசுகிறார் என குறிப்பிட்டார்.

இந்த 4 வருடம் என்ன நடந்ததுஎன்று பேசுவது இல்லை. நான், ஏன் என் தாத்தா காலத்தில் நடந்ததை வைத்து இவருக்கு ஓட்டு போட வேண்டும்? மோடி எவ்வளவு பேசினார், ஆனால் என்ன செய்தார்? நான் மோடிக்கு எதிராக பேசினால்உடனடியாக என்னை பாகிஸ்தான் போக சொல்கிறார்கள். அங்கு தீவிரவாதமும், வறுமையும் இருக்கிறது என்கிறார்கள். நான் சொல்கிறேன், அங்கே மதம்தான் அரசியலை தீர்மானிக்கிறது. ஒரு மதம் நாட்டை ஆண்டால், இப்படித்தான் பாகிஸ்தான்போல இந்தியாவும் ஆக வேண்டும்என்றுதான் அவர்கள் விரும்புகிறார்களா ? என கேள்வி எழுப்பினார்.

நான் மோடிக்கு எதிராக பேசியதற்கு பின் எனக்கு பாலிவுட்டில் வாய்ப்புகொடுக்கவேயில்லை. நெருங்கிய நண்பர்கள் கூட விலகிச் சென்று விட்டார்கள். தென்னிந்திய படங்களில் மட்டும்தான் வாய்ப்பு கொடுக் கிறார்கள். இருக்கட்டும். என்னிடம் போதுமான பணம் இருக்கிறது என தெரிவித்த பிரகாஷ் ராஜ்,  இப்போது இருக்கும் பெரியஅசுரன் பாஜக-தான், அவர்களை வீழ்த்துவதுதான் என் லட்சியம் என தெரிவித்தார்.

click me!