மக்களுக்கு ஹாப்பி நியூஸ்... மின்சாரமும் தண்ணீரும் இலவசம்... முதல்வர் அசத்தல் அறிவிப்பு!!

By Narendran SFirst Published Jan 16, 2022, 7:31 PM IST
Highlights

கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம், தண்ணீர், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம், தண்ணீர், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் , உத்தரகாண்ட் , பஞ்சாப்,  கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் வரும் பத்தாம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.   இந்த ஐந்து மாநிலங்களில் பஞ்சாப், கோவா ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. டெல்லியில் ஆட்சி நடத்திவரும் ஆம் ஆத்மி கட்சி அடுத்து கோவா, பஞ்சாபிலும் ஆட்சியை பிடித்து விடும் எண்ணத்தில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் புதிதாக களத்தில் குதித்துள்ளன. கோவாவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கோவா மக்கள் ஆவலுடன் புதிய நம்பிக்கையில் தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர். முன்பு காங்கிரஸ், பா.ஜ.க-வை விட்டால் வேறு வழியில்லாமல் இருந்தனர். இப்போது மாற்றத்தை விரும்புகின்றனர். ஆம் ஆத்மி கட்சி கோவா மக்களுக்காக 13 அம்ச செயல் திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். அப்படி வேலை கிடைக்காதவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் கோவாவில் சுரங்கங்கள் அனைத்தும் திறக்கப்படும். ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் கோவாவில் ஒவ்வொரு குடும்பமும் 5 ஆண்டில் தலா 10 லட்சம் ரூபாய் அளவுக்கு பயனடையும். 24 மணி நேரமும் மின்சாரம் மற்றும் தண்ணீர் இலவசமாக கொடுக்கப்படுவதன் மூலம், ஒவ்வொரு குடும்பமும் மாதம் 6 ஆயிரத்தை சேமிக்க முடியும். 18 வயதை கடந்த இரண்டு பெண்கள் இருந்தால் மாதம் 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 24 ஆயிரம் பெற முடியும். வேலையில்லாமல் இளைஞர்கள் இருந்தால் அவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இலவச மருத்துவ வசதிகளை வழங்க ஒவ்வொரு கிராமம் மற்றும் மாவட்டங்களில் மொஹல்லா கிளினிக் மற்றும் மருத்துவமனைகள் அமைக்கப்படும். தற்போது பா.ஜ.க அரசு காலியாகும் பணியிடங்களை நிரப்ப லஞ்சம் வாங்குகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வாய்ப்பளிப்போம். லஞ்சம் இல்லாத அரசை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார். 

click me!