சசிகலாவுக்கு முட்டுக்கட்டை போடும் டி.டி.வி.தினகரன்...கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்..!

Published : Jan 16, 2022, 06:30 PM IST
சசிகலாவுக்கு முட்டுக்கட்டை போடும் டி.டி.வி.தினகரன்...கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்..!

சுருக்கம்

மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் என அனைவரும் தினந்தோறும் புலம்பி வருகிறார்கள். 

இனியும் டிடிவி தினகரனை நம்பி பயனில்லை  என அமமுக நிர்வாகிகள் பலரும் முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரும் மனப் புளுக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

வரும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் என அனைவரும் தினந்தோறும் புலம்பி வருகிறார்கள். நாளுக்கு நாள் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ஆனால் நம் தலைவர் டிடிவி தினகரன் மரக்காணம் ரிசார்ட் அல்லது தஞ்சையில் தங்கி விடுகிறார். தலைநகருக்கு வருவதையே குறைத்து விட்டார். ஏற்கனவே முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவிற்கு சென்று விட்டனர். இப்படியே போனால் நம்முடைய எதிர்காலம் என்னவாகும்? என்று இருவரிடமும் அமமுக தொண்டர்கள் புலம்பி இருப்பதாக கூறப்படுகிறது.

நாங்கள் உங்களை நம்பி தான் இருக்கிறோம். நீங்களும் பொறுத்திருங்கள் பொறுத்திருங்கள் என்று சொல்லி சொல்கிறீர்களே..? எத்தனை நாளைக்குத்தான் பொறுத்திருப்பது? என்று கொந்தளித்து இருக்கிறார்கள். அந்த மாவட்ட பொறுப்பாளர்கள் இருவரும் தொண்டர்களிடம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அதிமுகவை தலைவர் விரைவில் மீட்டெடுத்து விடுவார் என்று சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். ஏற்கனவே டிடிவியின் பெசன்ட் நகர் இல்லத்தில் சென்ற கட்சி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து விடுவதற்கு கடிதத்தை கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். 

இதற்குக் காரணம் டிடிவி தினகரனுக்கு ஆலோசனை சொல்பவர்களிடம் உள்ள குறைகள் தான். சசிகலா எடுக்கும் ஒவ்வொரு திட்டத்திற்கும் எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டை போட்டு விடுகிறார். இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமியின் வளர்ச்சி, ஆளுமை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. இனி சசிகலாவால் அதிமுகவை அசைத்துப் பார்க்கக்கூட முடியாது. என்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?