நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. எழும்பூரை அதிர வைக்கும் ஜான் பாண்டியன்..! பீதியில் திமுக வேட்பாளர்..!

By Selva KathirFirst Published Mar 17, 2021, 9:43 AM IST
Highlights

பிரச்சாரத்தையே இன்னும் தொடங்காத நிலையில் தொகுதிக்கு தேர்தல் பணிகளை மேற்பார்வையிட ஜான்பாண்டியன் வரும் நிலையில், அங்கெல்லாம் இளைஞர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடி வருகிறது.

பிரச்சாரத்தையே இன்னும் தொடங்காத நிலையில் தொகுதிக்கு தேர்தல் பணிகளை மேற்பார்வையிட ஜான்பாண்டியன் வரும் நிலையில், அங்கெல்லாம் இளைஞர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடி வருகிறது.

கடந்த 2001ம்ஆண்டு எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஜான்பாண்டியன் போட்டியிட்டார். அப்போதும் அவர் இரட்டை இலை சின்னத்தில் தான் களம் இறங்கினார். ஜான்பாண்டியனை எதிர்த்து பரிதி இளம்வழுதி திமுக சார்பில் போட்டியிட்டார். 2001ம் ஆண்டில் சென்னை என்பது திமுகவின் கோட்டையாக இருந்தது. தமிழகம் முழுவதும் அதிமுகவிற்கு ஆதரவான அலை வீசினாலும் சென்னை வழக்கம் போல் திமுகவிற்கு சாதகமாகவே இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்தது. எழும்பூரில் வெறும் 89 வாக்குகள் வித்தியாசத்தில் ஜான் பாண்டியன் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் சென்னை எழும்பூரில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதி தனது செல்வாக்கை பயன்படுத்தி தேர்தல் அதிகாரிகள் மூலம் தேர்தல் வெற்றியை மாற்றிவிட்டதாக அப்போது ஒரு பிரச்சனை எழுந்தது. ஏனென்றால் சென்னை முழுவதும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருந்தனர். எழும்பூரில் மட்டுமே திமுக பின்னடைவில் இருந்தது. இத்தனைக்கும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜான் பாண்டியனை எதிர்த்து போட்டியிட்டவர் மிக மிக செல்வாக்கு படைத்த பரிதி இளம் வழுதி. ஆனாலும் கூட எழும்பூரில் திமுகவால் வெற்றியை எளிதாக பெற முடியவில்லை. இதற்கு காரணம் ஜான் பாண்டியன் என்கிற ஒரே ஒரு நபர் தான்.

2001ம் ஆண்டு ஜான் பாண்டியன் எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் போது தலித் சமுதாய இளைஞர்கள் அணி அணியாக திரண்டு வந்து தேர்தல் வேலை பார்த்தனர். இதனால் தான் அப்போதே திமுகவிற்கு ஜான் பாண்டியனால் மிகவும் டப் கொடுக்க முடிந்தது. தற்போதும் ஜான் பாண்டியன் தான் எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 2001ம் ஆண்டை போலவே தற்போதும் சென்னை முழுவதும் திமுகவிற்கு சாதகமான அலை வீசுவதாக ஊடகங்கள் உருவகப்படுத்தி வருகின்றன. ஆனால் அண்மையில் நெல்லையில் இருந்து எழும்பூர் தொகுதிக்கு வந்த ஜான் பாண்டியனை சந்திக்க இளைஞர் படை போட்டி போட்டது.

எழும்பூர் தொகுதியை பொறுத்தவரை கடந்த 2001ம் ஆண்டுக்கு பிறகு ஜான் பாண்டியன் மீண்டும் களம் இறங்குகிறார். கடந்த 20 வருடங்களில் தலைவர் என்கிற அந்தஸ்துடன் எழும்பூர் தொகுதியில் யாரும் போட்டியிட்டது இல்லை. ஆனால் தற்போது தென் மாவட்டங்களில் தலித் மக்களின் அடையாளமாக இருக்க கூடிய ஜான் பாண்டியன் அங்கு களம் இறங்கியுள்ளார். இது அந்த தொகுதி இளைஞர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. எப்படியாவது ஜான் பாண்டியனை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்கள் பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.

இதே போல் ஜான் பாண்டியன் தலித் சமுதாயத் தலைவராக அறியப்பட்டாலும் நாடார், வன்னியர் சமுதாயத்துடன் இணக்கமாக இருக்க கூடியவர். இந்த இரு சமுதாய மக்களும் எழும்பூரில் கணிசமாக வசித்து வருகின்றனர். அவர்கள் சார்ந்த சமுதாய அமைப்புகளும் கேட்காமலேயே ஜான்பாண்டியனுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. இதற்கு காரணம் நாடார் சமுதாய மக்கள் பெரும்பாலும் வணிகம் சார்ந்து இருக்க கூடியவர்கள். ஜான் பாண்டியன் போன்ற ஒருவர் எழும்பூரில் எம்எல்ஏ ஆனால் அது மாமூல் கேட்டு தொந்தரவு செய்யும் ரவுடிகளிடம் இருந்து தங்களை காக்க உதவும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இப்படி தொகுதிக்கு வந்த சில நாட்களிலேயே பல்வேறு விஷயங்களில் ஜான் பாண்டியன் முன்னிலை பெறத் தொடங்கியுள்ளார். திமுக சார்பில் எழும்பூரில் பரந்தாமன் போட்டியிடுகிறார். இவர் திமுகவிற்காக ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடியவர். களத்தில் இறங்கி பணியாற்றுபவர் இல்லை. எனவே ஜான் பாண்டியன் தரப்பு செய்யும் தேர்தல் பணிகளையும், தொகுதியில் ஜான் பாண்டியனுக்கு இருக்கும் செல்வாக்கையும் பார்த்து திமுக வேட்பாளர் பரந்தாமன் தரப்பு தற்போதே பீதியில் ஆழ்ந்துள்ளது.

click me!