ஈழத்தமிழர்களும்- இஸ்லாமியர்களும் எங்கள் ரத்தம்... திமுக நடத்திய போரில் முழக்கம்..!

By Thiraviaraj RMFirst Published Dec 23, 2019, 12:02 PM IST
Highlights

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக நடத்தியது பேரணி அல்ல போர் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து சென்னையில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நடத்திய பேரணியில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பிரிக்காதே பிரிக்காதே மண்ணின் மக்களை பிரிக்காதே” என்ற முழக்கத்தை ஓங்கி எழுப்பிய படி அனைத்துக் கட்சி தலைவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.

மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ, என பலரும் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முழக்கத்தை உச்சரித்தபடியே நடந்து சென்றனர். சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே புறப்பட்ட திமுக பேரணி புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியத்தை சென்றடைந்தது. வழிநெடுகிலும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும், தொண்டர்களும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

பிரிக்காதே பிரிக்காதே மண்ணின் மக்களை பிரிக்காதே எங்கள் ரத்தம் எங்கள் ரத்தம் ஈழத்தமிழர்களும், இஸ்லாமியர்களும் எங்கள் ரத்தம், வேண்டாம் வேண்டாம் வேண்டவே வேண்டாம்.. குழி பறிக்கும் சட்டம் வேண்டாம் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மத்திய அரசுக்கு அதிமுக அரசு துணை போகக் கூடாது என்றும், ஈழத்தமிழர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி துரோகம் இழைத்துவிட்டதாகவும் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், அதிமுக எம்.பி.க்களை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் ஒலித்தன.

பேரணி நடைபெற்ற சுமார் ஒன்றை மணி நேரமும் தொடர்ந்து முழக்கங்கள் ஒலித்தபடியே இருந்தன. இடைவிடாமல் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறே அமைதியான முறையில் பேரணி நிறைவடைந்தது.

click me!