முரசொலி மூலப்பத்திரம் எங்கே..? மு.க.ஸ்டாலின் காரை வழிமறித்து கேட்டதால் பரபரப்பு..!

Published : Dec 23, 2019, 11:36 AM IST
முரசொலி மூலப்பத்திரம் எங்கே..? மு.க.ஸ்டாலின் காரை வழிமறித்து  கேட்டதால் பரபரப்பு..!

சுருக்கம்

மு.க.ஸ்டாலின்  சென்ற காரை திடீரென வழிமறித்து முரசொலி அலுவலக மூலப்பத்திரத்தை கேட்டனர். இதனையடுத்து  ஸ்டாலின் சென்ற காரும் சில நொடிகள் நின்றது.   

மதுரையில் திமுக ஆதரவு பெற்ற கிறிஸ்தவ அமைப்புகள் சார்பாக நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கோள்வதற்காக மு.க.ஸ்டாலின் சென்றார். 

நேற்று நிகழ்ச்சி நடைபெறும் மு.க.ஸ்டாலின் இடத்திற்கு செல்லும்போது மதுரை பாஜகவினர் கட்சிக் கொடியுடன் 10க்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின்  சென்ற காரை திடீரென வழிமறித்து முரசொலி அலுவலக மூலப்பத்திரத்தை கேட்டனர். இதனையடுத்து  ஸ்டாலின் சென்ற காரும் சில நொடிகள் நின்றது.   இதனை சற்றும் எதிர்பாராத அவரது பாதுகாவலர்கள் பதற்றம் அடைந்தனர். இந்நிலையில் சூழ்நிலையை புரிந்து கொண்ட பாதுகாவலர்கள் பாஜகவினரை உடனடியாக அப்புறப்படுத்தினர்.


 
இதனால் அதிர்ச்சியில் உறைந்த திமுகவினர், பாஜகவினரை தாக்க முற்பட்ட பிறகு கலைந்து சென்றனர். மதுரையில் நடைபெற்ற இந்நிகழ்வு திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!
ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!