தங்கம் விளையும் நாடுகூட தங்கத்தை இலவசமாக தராது...!! ஆனால் அதிமுக கொடுக்கும், கெத்துகாட்டிய அமைச்சர்..!!

Published : Dec 23, 2019, 11:36 AM IST
தங்கம் விளையும் நாடுகூட தங்கத்தை  இலவசமாக தராது...!!  ஆனால் அதிமுக கொடுக்கும், கெத்துகாட்டிய அமைச்சர்..!!

சுருக்கம்

ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் அல்ல அரசு இலவசமாக வழங்கும் எந்த பொருளும் கிடைக்க கூடாது என்று நினைக்கும் கட்சி திமுக , 

தங்கம் விளையும் நாடு கூட மக்களுக்கு இலவசமாக தங்கம் கொடுக்காத போதும் மக்களுக்காக  8 கிராம் தங்கம் இலவசமாக கொடுக்கும் ஒரே கட்சி அ இஅதிமுகதான் என  அமைச்சர் செல்லூர் ராஜு பெருமிதம் தெரிவித்துள்ளார்.  

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்ட  கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி கிராமங்களில் அஇஅதிமுக கட்சி மற்றும் தோழமை கட்சி சார்பாக போட்டியிடும் ஊராட்சி தலைவர், மாவட்ட கவுன்சிலர் ,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆகிய இடங்களுக்கு போட்டியிடும் வேட்ப்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் மற்றும் , மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா அவர்கள் வாக்கு சேகரித்தனர் , அப்போது பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,  ஏழை மக்களுக்காக தொண்டாற்றும் ஒரே கட்சி அஇஅதிமுக, பெண்களுக்கு இலவசமாக தங்கம், சைக்கிள், மடிகணினி, இரு சக்கர வாகனம், விவசாயிகளுக்கு இரண்டாயிரம் ரூபாய், உழைக்கும் மக்களுக்காக மிக குறைந்த விலையில் வயிறாற சாப்பிட அம்மா உணவகம், 

இது போன்று மக்களுக்காக நல்லாட்சி செய்யும் ஒரே அரசு அஇஅதிமுக, என்றார்.  ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் அல்ல அரசு இலவசமாக வழங்கும் எந்த பொருளும் கிடைக்க கூடாது என்று நினைக்கும் கட்சி திமுக , ஆகையால் மக்களாகியிய உங்களுக்கு பணியாற்றிட அஇஅதிமுக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் தோழமை கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கும் மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு பேசி அவர்  வாக்கு சேகரித்தார்,
 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!