கல்வியமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் சொன்ன யோசனை... எப்பதான் நடக்கும்10ம் வகுப்பு தேர்வு.!!

By T BalamurukanFirst Published May 20, 2020, 7:49 PM IST
Highlights

தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டது.அடுத்த மாதம் ஜூன் முதல் தேதியிலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
 

தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டது.அடுத்த மாதம் ஜூன் முதல் தேதியிலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 


 
ஆனால் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நாளே தேர்வுகள் தொடங்குவதில் உள்ள சிரமங்களை பல அரசியல்கட்சிகள்,கல்வியாளர்கள் ஆசிரியர் சங்கங்கள் பொதுமக்கள் எனக் கூறி வந்தனர். இந்நிலையில் முதலமைச்சருடன் ஆலோசித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வுகளை ஒத்தி வைத்து புதிய தேர்வு அட்டவணையை வழங்கியுள்ளார்.
 
இதுகுறித்து, உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், "10 ஆம் வகுப்பு தேர்வை 15 நாட்களுக்கு தள்ளிவைத்த அரசுக்கு நன்றி. ஆனால் தனிமனித விலகளுடன்கூடிய சுகாதாரமான வாகனம், வகுப்பறை உள்ளிட்ட கொரோனா பரவலுக்கு எதிரான பெற்றோர்- ஆசிரியர்,மாணவர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்பட்டால்தான் அரசின் நடவடிக்கை முழுமையடையும் என பதிவிட்டார். 


 
இந்த நிலையில் இன்று அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து... "கொரோனா பாதிப்பு சீராகி இயல்பு நிலை திரும்பும்போது 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும்". எனக் கோரிக்கை வைத்துள்ளார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இது குறித்து நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார் உதயநிதி.இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், 
"எங்களை வரவேற்று கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுக்கு நன்றி. 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மனநிலையை தேர்வுக்குத் தயார்ப்படுத்திடவும், தேர்வெழுத வருபவர்களை நோய்த்தொற்றிலிருந்து காத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பதிவிட்டுள்ளார். 
 

click me!