அட்ராசக்க...! ரூ.56 ஆயிரம் கோடி விவசாயக்கடன் தள்ளுபடி...! விவசாயிகள் மகிழ்ச்சி..!

Asianet News Tamil  
Published : May 17, 2018, 12:45 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
அட்ராசக்க...! ரூ.56 ஆயிரம் கோடி விவசாயக்கடன் தள்ளுபடி...! விவசாயிகள் மகிழ்ச்சி..!

சுருக்கம்

ediyoorappa favoured for farmers

கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார்.

பரப்பான  அரசியல் சூழலில் 104  இடங்களை பிடித்த பாஜக ஆட்சியை பிடித்தது.அதே சமயத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் இரண்டு அணிகளும் கூட்டு சேர்ந்து மெஜாரிட்டி  வைத்துள்ளது.

மஜத - 38 இடங்களையும், காங்கிரஸ் 78  இடங்களையும் பெற்றது. சுயேச்சை - 2  என்ற நிலையில் உள்ளது.

இருந்த போதிலும் தனி பெரும்பான்மையாக பாஜக மட்டுமே 104 இடங்களை பிடித்து உள்ளது.

, தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் கடிதம் வழங்கினார்.

அதே போன்று பாஜக சார்பில் எடியூரப்பா தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம்  கடிதம் கொடுய்தார்.

ஆனால், எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று  இரவு அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எடியூரப்பா பதவியேற்பை கண்டித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் தலைமைச் செயலகம் வந்து தனது பணியைத் தொடங்கினார் எடியூரப்பா.

முதல் கையெழுத்தாக ரூ.56 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார்.

இதன்மூலம் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய 5000 ரூபாய் முதல் 1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 

பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில்  ஏற்கனவே பாஜக அறிவித்து இருந்தது என்பது  குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!