எவ்வளவு சொல்லியும் கேட்காத எடப்பாடியார்.. சசிகலாவை கட்சியில் இணைக்கும் முடிவை அதிமுகவிடமே விட்ட பாஜக.

By Ezhilarasan BabuFirst Published Mar 3, 2021, 5:55 PM IST
Highlights

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது, இதில்  எந்த பிரச்சனையும் இல்லை, மேலும் சசிகலா  மற்றும் டி.டி.வி தினகரன் - பலம் மற்றும்  பலவீனம்  குறித்து ஈ.பி எஸ் மற்றும் ஓ. பி.எஸ்க்கு  தெரியும் எனவே,  அவர்களை இணைப்பது குறித்து  அதிமுகவே முடிவெடுக்கும் என்றார்.  

சசிகலா  மற்றும் டி.டி.வி தினகரன் - பலம் மற்றும்  பலவீனம்  குறித்து ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்க்கு தெரியும் எனவே அவர்களை இணைப்பது தொடர்பாக  அதிமுகவே முடிவெடுக்கும் என பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தேர்தல் தொடர்பாக  பா.ஜ.க நிர்வாகிகளுடன் 
கமலாயத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.  

இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக தேர்தல் இணைப் பொறுப்பாளர் வி.கே.சிங். பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி, மாநிலத் துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன், சக்கரவர்த்தி, கர்நாடக மாநில அமைப்பு பொது செயலாளர் அருண் குமார், தெலுங்கானா மாநில அமைப்பு பொது செயலாளர்- மந்திரி ஸ்ரீனிவாசலு பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி கூறியதாவது, 

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது, இதில்  எந்த பிரச்சனையும் இல்லை, மேலும் சசிகலா  மற்றும் டி.டி.வி தினகரன் - பலம் மற்றும்  பலவீனம்  குறித்து ஈ.பி எஸ் மற்றும் ஓ. பி.எஸ்க்கு  தெரியும் எனவே,  அவர்களை இணைப்பது குறித்து  அதிமுகவே முடிவெடுக்கும் என்றார். மேலும்  தொகுதி பங்கீட்டில் நாங்கள் எத்தனை தொகுதிகள் பெருகிறோமோ அத்தனையிலும் வெற்றி பெருவோம் என்றும்  அனைத்து தொகுதிகளிலும் பாஜக-வை பலப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம் எனவும் கூறினார்.  ச சிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அமித்ஷா எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்சிடம் வலுவாக அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்பட்டது. 

அமமுக தனித்து போட்டியிட அனுமதித்தால் அது திமுகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்றும், குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிமுக வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது என்றும் அமித்ஷா,  இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் அதற்கு இபிஎஸ்- ஓபிஎஸ் இருவருமே சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, சசிகலா, டிடிவி தினகரனை இணைப்பது குறித்து அதிமுக தலைதான் முடிவு செய்ய வேண்டும் என கூறியிருப்பதன் மூலம், சசிகலா டிடிவி தினகரனை அதிமுகவில் இணைப்பதற்கான முயற்சியை  பஜக தேசிய தலைமை கைவிட்டு விட்டதோ என எண்ண வைக்கிறது.  

 

click me!