உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளருக்கு எடப்பாடியார் விருது வழங்கினார்: முதலமைச்சர் அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 15, 2020, 11:21 AM IST
Highlights

கொரோனா தடுப்பு பணியில் உலகளவில் சிறப்பாக செயலாற்றியதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சாமிநாதனுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கி கவுரவித்தார்.

கொரோனா தடுப்பு பணியில் உலகளவில் சிறப்பாக செயலாற்றியதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சாமிநாதனுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கி கவுரவித்தார். நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சென்னை இராஜாஜி சாலையில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் பழனிசாமி ஏற்றுக்கொண்டார். சுதந்திர தின விழாவையொட்டி நான்காவது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியேற்றி வைத்து உரையாற்றினார் அப்போது  அவர் பல்வேறு துறைகளுக்கான விருதுகளை வழங்கினார். 

கொரோனா நோய்த்தொற்றின் சங்கிலியை தகர்த்த சென்னை மாநகராட்சிக்கு நல் ஆளுமை விருது,  கொரோனோ நெருக்கடியில் தடையின்றி மருந்து கிடைக்க செய்த மருத்துவ சேவை கழகத்திற்கு நல் ஆளுமை விருது, அதேபோல் துணிவு மற்றும் சாகச செயல்களுக்கு தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது மூன்று பெண்களுக்கும் வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவல்லிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. அதேபோல் நிகழ்ச்சியின் உச்சாணியாக உலக அளவில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, தமிழகத்தை சேர்ந்தவரும், உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளருமான மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவித்தார். அவருக்கு covid-19 சிறப்பு விருது வழங்கப்பட்டது. மொத்தத்தில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 26 பேருக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்கி முதலமைச்சர் கௌரவித்தார்.

மருத்துவ சேவை கழகத்திற்கான நல் ஆளுமை விருது அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றார். அதேபோல் சமூகப் பணியாளர் திருச்சி சாந்தகுமார்,மற்றும் சிறந்த மருத்துவராக சேலம் சியாமலாவுக்கு விருது வழங்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் சிறந்த மாநகராட்சி விருது வேலூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது. சிறந்த பேரூராட்சி முதல் பரிசு சேலம் வனவாசி, இரண்டாம் பரிசு (தேனி) வீரபாண்டி, மூன்றாம் பரிசு (கோவை) மதுக்கரைக்கு வழங்கப்பட்டது. அதேபோல் மதுரை அருண்குமார், கடலூர் ராம்குமார், சென்னை அம்பேத்கர் என்பவருக்கு  சிறந்த இளைஞர் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின கொடியை நான்காவது முறையாக ஏற்றி வைத்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், உயிரிழப்போர் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது என்றார்.

 

click me!