எடப்பாடி அமைத்த குழுவுடன் தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனை - கடுப்பில் ஒபிஎஸ் வட்டாரம்

Asianet News Tamil  
Published : Apr 21, 2017, 03:37 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
எடப்பாடி அமைத்த குழுவுடன் தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனை - கடுப்பில் ஒபிஎஸ் வட்டாரம்

சுருக்கம்

edappadi team meeting dinakaran

ஒ.பன்னீர்செல்வத்துடன் பேசுவதற்கு எடப்பாடி அணியில் இருந்து உருவாக்கப்பட்ட குழுவுடன் தினகரன் ஆதரவாளர்கள் சந்தித்து பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது காரணமாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் ஏரளாமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து எடப்பாடி தலைமை விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தது. ஆனால் அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.

இதனால் எடப்பாடிக்கும் தினகரனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்படவே தினகரனை கட்சியில் இருந்து நீக்க அமைச்சரவை முடிவு செய்தது.

இதையடுத்து பிரிந்து சென்ற ஒ.பி.எஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த எடப்பாடி அணியில் இருந்து அமைச்சர் வைத்தியலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி,  சி.வி.சண்முகம், ஜெயகுமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த அமைச்சர்களை தினகரன் ஆதரவாளரான தளவாய் சுந்திரம் சந்தித்து பேசினார்.

அவரை தொடர்ந்து தற்போது அமைச்சர் செங்கோட்டையனை தமிழ்ச்செல்வன் சந்தித்து பேசினார்.

இதனால் ஒ.பி.எஸ் வட்டாரம் நம்மை கழட்டி விட்டுவிடுவார்களோ என்ற பீதியில் தான் இருந்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் சிலர் கூறி வருகின்றனர்.

தினகரனை கட்சியில் இருந்து நீக்கிய பிறகும் தமிழ்செல்வன் செம விசுவாசியாக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்.. சஸ்பென்ஸ் உடைத்த செங்கோட்டையன்..!
'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?