"உங்களை விட எனக்கு தினகரன் மீது அதிக பாசம் இருக்கிறது" - எம்எல்ஏக்களுக்கு உணர்த்திய எடப்பாடி!

 
Published : Jun 20, 2017, 09:19 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
"உங்களை விட எனக்கு தினகரன் மீது அதிக பாசம் இருக்கிறது" - எம்எல்ஏக்களுக்கு உணர்த்திய எடப்பாடி!

சுருக்கம்

edappadi says that he has more affection on dinakaran

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்கு முயன்ற வழக்கில், தினகரன் சிறை செல்லும் தருவாயில், அவருக்கு எதிராக அமைச்சர்கள் அணி உருவானது.

அவர், திகார் சிறை சென்று ஜாமினில் வெளி வருவதற்குள், அந்த அணி மிகவும் வலுவாகி விட்டது. தினகரனை ஒதுக்கியது, ஒதுக்கியதுதான் என்பதிலும் உறுதியாக இருக்கிறது.

அதனால், தன்னுடைய செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டும் வகையில் 30 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ க்களை தம் அணியில் வைத்துக் கொண்டு, எடப்பாடிக்கு நெருக்கடி மேல் நெருக்கடி கொடுத்து வருகிறார் தினகரன்.

ஆனால், எதற்கும் அசராத எடப்பாடி, அதை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாமல், தனது வழியில் சுதந்திரமாக இயங்கி வருகிறார்.

இதையடுத்து, எடப்பாடியை நேரில் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் சிலர், நீங்கள் ஆட்சியை கவனித்து கொள்ளுங்கள், தினகரன் கட்சியை பார்த்து கொள்ளட்டும் என்று டீல் பேசினர்.

மேலும், அரசு நடத்தும் இப்தார் விருந்துக்கு தினகரன் தலைமை ஏற்கட்டும், அதேபோல், அவரை கட்சி அலுவலகம் செல்ல அனுமதி அளியுங்கள், அவர் மட்டும் இல்லை என்றால் நீங்கள் முதல்வர் ஆகியிருக்க முடியுமா? என்றும் கூறி உள்ளனர்.

அவற்றை எல்லாம் பொறுமையுடன் கேட்ட எடப்பாடி, ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். கட்சி தொண்டர்கள் மத்தியில் தினகரனின் எதிர்ப்பு அலையே கடுமையாக வீசுகிறது.

இந்த நிலையில், அவரை மீண்டும் கட்சி பணியாற்ற அனுமதித்தால், கட்சி அதல பாதாளத்திற்கு போய்விடும். பிறகு அதை மீண்டும் தூக்கி நிறுத்துவது கடினம்.

தினகரன் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்த காரணத்தினால்தான், பன்னீர் போகும் இடமெல்லாம், பேசும் இடமெல்லாம் கூட்டம் அலை மோதுகிறது.

தினகரன் மீது உங்களுக்கு எந்த அளவில் பாசம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு எனக்கும் பாசம் இருக்கிறது. ஆனால் அதைவிட கட்சியின் எதிர்காலம் மிகவும் முக்கியம்.

இந்த உண்மையை புரிந்து கொண்டு அமைதியாக இருக்க சொல்லுங்கள் என்று, முகத்தில் அடித்ததுபோல, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்களிடம் எடப்பாடி கூறிவிட்டார்.

அம்மா முதல்வராக இருந்தபோது, எப்படி அவர் தலைமையில் இப்தார் நோன்பு நடந்ததோ, அதே போல, முதல்வராக இருக்கும், எனது தலைமையில்தான், அரசு இப்தார் நோன்பு நடக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் அவர் உறுதியாக கூறி இருக்கிறார்.

அதனால், பதில் எதுவும் சொல்ல முடியாமல், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் திரும்பி சென்றுள்ளனர்.

இதை தொடர்ந்தே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வான தங்க தமிழ்ச்செல்வன் நேற்று, சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார் என்று கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!