
தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு நடத்தினார் என்பதே தவறு எனவும் அரசின் திட்டங்களை கேட்டறிந்தார் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சில தினங்களுக்கு முன்பு கோவை அரசு அதிகாரிகளுடன் ஆய்வு பணி மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.
இதற்கு தமிழக அரசியல் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநர் அதிகாரத்திற்குள் இல்லாமல் எல்லை தாண்டுகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.
ஆனால், ஆளுநரின் செயலுக்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டு தெரிவித்தும் கடிதங்கள் குவிந்தன. தங்கள் மாவட்டத்துக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்து கடிதங்களும் வந்தனவாம்.
இதை அடுத்து, மற்ற மாவட்டங்களிலும் சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபடப் போவதாக, ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு நடத்தினார் என்பதே தவறு எனவும் அரசின் திட்டங்களை கேட்டறிந்தார் எனவும் தெரிவித்தார்.