
டிடிவி தினகரன் யார் எனவும் மீடியாக்களே ரேட்டிங்காக அவரை பேட்டி எடுத்து பெரிய ஆள் போன்று பிம்பத்தை காண்பிக்கிறது எனவும் முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று சிவகங்கையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
பின்னர், மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ஒபிஎஸ்சும் இபிஎஸ்சும் துரோகம் செய்துவிட்டதாக டிடிவி கூறுகிறார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பேசிய எடப்பாடி, டிடிவி தினகரன் யார் எனவும் அவரை நீங்கள் தான் தேவையில்லாமல் பெரியாளாக ஆக்குகிறீர்கள் எனவும் கொதித்தெழுந்துவிட்டார்.
இதுவரை கட்சிக்காக தான் 6 முறை சென்றுள்ளேன் எனவும் தினகரன் எத்தனை முறை சிறை சென்றுள்ளார் எனவும் கேள்வி எழுப்பினார்.
கட்சிக்காக யார் உண்மையாக உழைக்கிறார்கள் என்பது உண்மையான அதிமுக தொண்டர்களுக்கு தெரியும் எனவும் பத்திரிக்கை ரேட்டிங்காக டிடிவி தினகரனை பெரிய ஆளாக மாற்றாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.
தான் சேலத்தில் இருந்த போது தன்னை தானே ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவித்து கொண்டார் டிடிவி எனவும் 10 ஆண்டு காலம் ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டு கட்சியிலே இல்லாமல் இருந்தார் எனவும் குறிப்பிட்டார்.
டிடிவி இதுவரை கட்சிக்காக என்ன சேவை செய்தார் எனவும் என்ன தியாகம் செய்தார் எனவும் கேள்வி மேல் கேள்வி எழுப்பினார் எடப்பாடி.