பொறுத்தது போதும்; பொங்கி எழுந்த எடப்பாடி – தினகரனுக்கு போட்டியாக 9 மாவட்ட எம்.எல்.ஏக்களை சந்திக்க திட்டம்...

 
Published : Jun 06, 2017, 01:50 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
பொறுத்தது போதும்; பொங்கி எழுந்த எடப்பாடி – தினகரனுக்கு போட்டியாக 9 மாவட்ட எம்.எல்.ஏக்களை சந்திக்க திட்டம்...

சுருக்கம்

Edappadi plans to meet 9 district MLA

அதிமுக எம்.எல்.ஏக்கள் 19 பேர் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இன்று மாலை 3மணிக்கு 9 மாவட்ட எம்.எல்.ஏக்களை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி  திட்டமிட்டுள்ளார்.

ஒ.பி.எஸ்சிடம் இருந்து முதலமைச்சர் பதவி பிடுங்கப்பட்ட பிறகு 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலாமைச்சராக பதவியேற்றார்.

ஆனால் எடப்பாடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அவருக்கு எதிராக தோப்பு வெங்கடாசலம் தலைமையில் தனி அணி உருவாகியது.

இதையடுத்து டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி விட்டு ஒ.பி.எஸ்சுடன் கூட்டு சேர வேண்டும் என எடப்பாடி தரப்பு திட்டமிட்டது.

ஆனால் சசிகலா குடும்பத்தை பிரித்து வைத்தால் தான் கூட்டணி என ஒ.பி.எஸ் அணியினர் ஸ்ட்ரிக்ட்டாக கூறி விட்டனர்.

இதைதொடர்ந்து எடப்பாடி அரசு எம்.எல்.ஏக்களை கண்டுகொள்ளததால் பெரும்பாலானோர் அதிருப்தியில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இரட்டை இலை விவகாரத்தில் சிறைக்கு சென்று ஜாமீனில் திரும்பிய  தினகரனை எடப்பாடி தரப்பு கட்சியில் இருந்து ஒதுக்குவதாக அறிவித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர். இதுவரை 19எம்.எல்.ஏக்கள் ஆதரவு தினகரனுக்கு இருக்கும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 9 மாவட்ட எம்.எல்.ஏக்களை மாலை 3 மணிக்கு சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், வேலூர், கடலூர் மாவாட்ட எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்