நீங்க வீடு இல்லாத ஏழைகளா ? அப்ப உங்களுங்கு அரசே வீட்டு மனைகள் வழங்கும் !! எடப்பாடி அதிரடி அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Aug 20, 2019, 7:16 AM IST
Highlights

வீட்டுமனை இல்லாத, அனைத்து ஏழை மக்களுக்கும், வீட்டுமனை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும் 5 லட்சம் முதியவர்களுக்கு ஓய்பூதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், நங்கவள்ளியில், முதலமைச்சரின்  சிறப்பு குறை தீர் திட்டத்தை  எடப்பாடி பழனிசாம் தொடங்கி வைத்து  நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். 
அப்போது, ,கர்ப்புறங்கள் மற்றும் கிராமங்கள்தோறும் அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று, மனுக்களை பெற்று, மக்களின் குறைகளுக்கு தீர்வு காண, முதலமைச்சரின்  சிறப்பு குறைதீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து நகர்ப்புற வார்டுகளிலும், கிராமங்களிலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி,  குறிப்பிட்ட நாளில் அலுவலர் குழு, ஆகஸ்ட் மாத இறுதிக்குள், மனுக்களை பெறுவார்கள் என்றும், இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு, ஒரு வாரத்திற்குள் அனுப்பப்படும். 

அம்மனுக்கள் மீது, ஒரு மாதத்திற்குள் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைக்கு பின், செப்டம்பர் மாதம், அமைச்சர்கள் தலைமையில், தாலுகா அளவிலான விழா நடத்தப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வீட்டுமனை இல்லாத அனைத்து ஏழை மக்களுக்கும், வீட்டு மனை வழங்குவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்கும். முதியோர் உதவித்தொகை திட்டத்தில், மேலும், 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாம் தெரிவித்தார்.

click me!