பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, மற்றும் இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பூத் கமிட்டி-பொறுப்பாளர்கள் நியமனம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பதற்காக மாவட்ட வாரியாக பொறுப்பாளரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக அலுவலகத்தில் ஏற்கெனவே நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தின்போது,
undefined
சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல்; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கமாக ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் இப்பணிகள் நடைபெற்று வரும் விபரம் அறிந்தேன்.
பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியீடு
இந்நிலையில், பூத் கமிட்டி அமைத்தல்; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகள் முறையாக நடைபெற்று வருகின்றனவா என்பதை மட்டும் மேற்பார்வையிடுவதற்காக, மாவட்ட வாரியாக கீழ்க்கண்டவாறு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமியும், திண்டுக்கல் மாவட்டத்திற்கு திண்டுக்கல் சீனிவாசனும், திண்டுக்கல் கிழக்கிற்கு நத்தம் விஸ்வநாதனும், திருவள்ளுர் வடக்குக்கு பொன்னையனும், திருப்பத்தூருக்கு தம்பிதுறையும், திருச்சிக்கு செம்மலையும், மதுரைக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதியும், திருச்சிக்கு கோகுல இந்திராவும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரில் சென்று பணிகளை பார்வையிட வேண்டும்
கரூருக்கு சின்னசாமியும், திருநெல்வேலிக்கு கருப்பசாமி பாண்டியனும், காஞ்சிபுரத்திற்கு வேணுகோபாலும், தேனிக்கு ஏகே செல்வராஜன், கோவைக்கு சேதுராமனும், ராமநாதபுரத்திற்கு சுதா கே பரமசிவனும் நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதே போல பல்வேறு மாவட்டங்களுக்கான பொறுப்பாளரையும் அறிவித்துள்ளார். மேலும் புதிதாக அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..! அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி