இபிஎஸ் கொடநாடு குறித்து எழுத வேண்டாம் சொன்னார்.. பகீர் உண்மையை போட்டுடைத்த மருது அழகுராஜ்.. !

By vinoth kumar  |  First Published Aug 25, 2023, 2:44 PM IST

கொடநாடு குற்றவாளிகளால் அடையாளம் காட்டப்பட்ட சேலம் இளங்கோவனை காவல்துறை இதுவரை அழைத்து விசாரிக்கவில்லை. தனபாலின் குற்றச்சாட்டு மூலம் திமுகவின் பி டீம் எடப்பாடி பழனிச்சாமி என்பது தான் என தெரிகிறது.


2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு வழக்கில் சிறைக்கு செல்வார் என்று மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான மருது அழகுராஜ்;- ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் ஆத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது. கனகராஜ் அண்ணன் தனபால் வாக்குமூலத்தை புகாராக ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டிப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- கனகராஜ் ஜெயலலிதா கார் டிரைவர் கிடையாது.. கொடநாடு கேள்வியால் கடுப்பான இபிஎஸ்.!

கொடநாடு குற்றவாளிகளால் அடையாளம் காட்டப்பட்ட சேலம் இளங்கோவனை காவல்துறை இதுவரை அழைத்து விசாரிக்கவில்லை. தனபாலின் குற்றச்சாட்டு மூலம் திமுகவின் பி டீம் எடப்பாடி பழனிச்சாமி என்பது தான் என தெரிகிறது.

நமது அம்மா ஆசிரியராக இருந்த என்னிடம் கொடநாடு குறித்து எழுத வேண்டாம் என்று அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கூறினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு வழக்கில் சிறைக்கு செல்வார் என மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  கொடநாடு கொள்ளை இபிஎஸ் சொல்லியே நடந்தது! என்னுடை தம்பி விபத்தில் இறக்கவில்லை! திட்டமிட்ட சதி! கனராஜ் அண்ணன்

click me!