தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 71வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 71வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கட்சி தொண்டர்கள் விஜயகாந்தின் பிறந்த நாளை மாவட்ட வாரியாக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அண்மையில் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து வந்த செய்திகள் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், ஒவ்வொரு பிறந்த நாளிலும் கட்சி அலுவலகத்திற்கு வரும் விஜயகாந்த் அன்றைய தினம் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக் கொள்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் விஜயகாந்த் தொண்டர்களை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சந்திரயான் 3 வெற்றியை 45 அடி ஆழ கடலுக்கடியில் கொண்டாடிய நீச்சல் வீரர்கள்
அதன்படி விஜயகாந்தை சந்திப்பதற்காக காலை முதலே தொண்டர்கள் தேமுதிக அலுவலகத்தில் குவிந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தொண்டர்களை பார்ப்பதற்காக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்த விஜயகாந்தை தொண்டர்கள் கேப்டன் கேப்டன் என்ற முழக்கத்துடன் வரவேற்றனர். தொண்டர்களின் கோசத்தால் உற்சாகமடைந்த விஜயகாந்த் தனது இரு கைகளையும் உயர்த்தியபடி தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்.