தமிழக சட்டபேரவையில் இன்றைய கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் உதயகுமாரை நியமிக்க கோரியதை வலியுறுத்தி இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் பிரச்சனை எழுப்பினர்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை பார்த்து பயந்து கலகம் செய்யும் முடிவுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு வந்துள்ளது என சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டபேரவையில் இன்றைய கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் உதயகுமாரை நியமிக்க கோரியதை வலியுறுத்தி இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் பிரச்சனை எழுப்பினர். அப்போது எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் பேச முயன்றார். ஆனால் சபாநாயகர் அப்பாவு கேள்வி நேரத்திற்கு பிறகு தங்களுக்கு பேச அனுமதி வழங்கப்படும் என கூறினார். மேலும் கடந்த காலத்தில் ஜானகி அம்மாளுடன் ஏற்பட்ட மோதல் போக்கிலும் இதே போல் பிரச்சனை எழுப்பியதாக கூறினார். மேலும் அதிமுகவினர் கலகம் செய்ய வந்துள்ளீர்கள். மக்கள் பிரச்சனை பேச மறுக்கின்றீர்கள். அவையின் மாண்பை குலைக்க அனுமதிக்க மாட்டேன் என சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க;- ஓபிஎஸ்யோடு பக்கத்து இருக்கையில் இபிஎஸ்..! சட்டசபையில் கடும் கூச்சல் எழுப்பிய அதிமுக..! வெளியேற்றிய சபாநாயகர்
ஆனால், எடப்பாடி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வந்ததால் அவை காவலர்களை கொண்டு அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிடார். இதனையடுத்து, இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களை குண்டுகட்டாக அவை காவலர்கள் வெளியேற்றினர்.
இதனையடுத்து, பேசிய சபாநாயகர் அப்பாவு இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்துக்கு எதிராக, மத்திய அரசை ஆதரிக்கும் நோக்கில் வேண்டுமென்றே திட்டம்போட்டு பிரச்னை செய்கிறீர்கள். இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் வருவதை அறிந்து, இபிஎஸ் தரப்பு மத்திய அரசுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபடுகின்றனர். மேலும், ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுவதால் பழனிசாமி தரப்பு அச்சமடைந்துள்ளதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார்.