ஏழை எளிய மக்களின் நகைக்கடன்கள் தள்ளுபடி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

By Asianet TamilFirst Published Feb 26, 2021, 9:24 PM IST
Highlights

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக,  கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக,  கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

கொரோனா ஊரடங்கினால் வாழ்வதாரம் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் டிசம்பர் மாதம் வரை இலவசமாக வழங்கப்பட்டது. ஊடரங்கு காலத்தில் ஏழை எளிய மக்களின் இதர தேவைகளை கருத்தில் கொண்டு நிவாரண உதவியாக 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஏழை மக்களும் கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்புடன்  2, 500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து நிவர் மற்றும் புரெவி போன்ற புயல்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை திரும்பி தொடங்கிடும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டுறவு விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்தார். கடன் தள்ளுபடி மூலம் தங்களது வாழ்கையை மறுபடியும் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளதாக கூறி விவசாய சங்கங்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தன.

இதேபோல், ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் நகைகளை வைத்து பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்ட சபையில் தெரிவித்தார். நகைக்கடன் தள்ளுபடி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்களது வாழ்க்கையை மீட்டு கொடுத்துள்ளதாக ஏழை எளிய மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். இதன் மூலம் விவசாயிகள் மட்டும் அல்லாது ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருவதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீரூபித்துள்ளார். 

click me!