நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல்..? மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி- திமுகவை அலறவிட்ட இபிஎஸ்

Published : Apr 02, 2023, 01:21 PM IST
நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் தேர்தல்..? மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி- திமுகவை அலறவிட்ட  இபிஎஸ்

சுருக்கம்

அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரலாம் அப்போது விடிவுக்காலம் வரும் நமக்கான எதிர்காலம் காத்துகொண்டு இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு இன்று காலை புறப்பட்டு சென்றார். இதனையடுத்து வழி நெடுகிலும் அதிமுக தொண்டர்கள் இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து விழுப்புரம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து  ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக இயக்கத்தை அழிக்க வேண்டும், முடக்க வேண்டும் என திமுக  எத்தனையோ சூழ்ச்சிகள் செய்தன. சிவி சண்முகம் போன்ற தொண்டர்கள் அதிமுகவில் உள்ளதால், எதிர்காலத்தில் திமுகவை வீழ்த்துகின்ற பணியை  என்னிடம் கொடுத்துள்ளனர். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக என தெரிவித்தவர், தொண்டர்கள் நினைப்பதை நிறைவேற்றுகிற பணியாக எனது பணி அமையும் என கூறினார். 

சட்ட ரீதியாக சந்திக்க தயார்

நம்மோடு இருந்து எதிரியாக செயல்பட்டு இன்று திமுகவோடு இணைந்து  பி டீமாக செயல்பட்டுகின்றனர். அவர்களையெல்லாம் நீதிமன்றத்தின் மூலமாக சட்டத்தின் மூலமாக வென்று இரு தலைவர் கண்ட கனவை அனைவரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றுவோம் என தெரிவித்தார். வேண்டும் என்றே திட்டமிட்டு அதிமுகவினர் மீதும் தன் மீதும்  பொய் வழக்குகள் போடுகின்றனர். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளதாக கூறினார்.  அதிமுக இயக்கத்தை உருவாக்கிய போது எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் பல்வேறு சோதனைகளை சந்தித்தனர். அவ்வாறு பல்வேறு சோதனைகளை சந்தித்து வெற்றியை கண்டுள்ளோம். இன்று வரை சோதனை சந்தித்து வருகிறோம். தொண்டர்கள் மூலம் வெற்றி பெறுவோம். அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி தொடரந்து செய்வோம். சோதனையை வெற்றி படிக்கட்டாக மாற்றுவோம்.

ஒரே நாடு, ஒரே தேர்தல்

அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிவார்கள் என தெரிவித்தார்.  இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் ஜெயலலிதா, எம் ஜி ஆர், அவர்களுக்கு வாரிசுகள் இல்ல்லை  இரு தலைவர்களுக்கும் நாம் தான் வாரிசுகள். நம்மை தான் வாரிசுகளாக பார்த்தனர்.  நம் மீது வழக்குகள் தொடர்ந்து அச்சுறுத்தினால் அது அவர்களுக்கு கானல் நீராக போகும்.  அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வந்தாலும் வரலாம். மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் தொடர்ந்து கூறிக்கொண்டே வருகின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல்  என, எனவே 2024 நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும். அப்போது விடிவுக்காலம் வரும்.  நமக்கான எதிர்காலம் காத்துகொண்டு இருக்கிறது தேனிக்களை போல் சுறுசறுப்பாக செயல்படுவோம் என எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை கேட்டுக்கொண்டார். 

இதையும் படியுங்கள்

தஞ்சாவூரில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து..! இரண்டு பேர் உயிரிழப்பு- நிவாரணம் உதவி அறிவித்த முதலமைச்சர்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!