தமிழக சட்டசபை அக்டோபர் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என்று சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என்றும், கூட்டம் தொடங்கிய உடன் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பிரபலங்கள், முன்னாள் சபாநாயகர் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, அன்றைய அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும்.
இதையும் படிங்க..ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி.. ஓபிஎஸ்சுக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி - உண்மையை உடைத்த தங்கமணி !
பின்னர் அன்றைய தினமே அலுவல் ஆய்வுக் குழு கூடி, பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும் என்று தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆகிய இருவரும் தன்னிடம் கடிதம் வழங்கியிருப்பதாகவும், யாருக்கு எந்த இருக்கையை ஒதுக்குவது என்பது தனது முடிவு தான்.
இதையும் படிங்க..சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்.. பின்னணியில் நடந்தது என்ன ?
அவை மரபின் படி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் என்பதால் கண்ணியத்துடன் நடந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை நடவடிக்கைகளை முழுமையாக நேரலையில் ஒளிபரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக’ கூறினார்.
இதையும் படிங்க..திமுக பிளானை காப்பி அடித்த அண்ணாமலை.. அதே இடம், அதே நேரம்.. நம்ம லிஸ்ட்லயே இல்லையே !