கொரோனா பீதியில் அதிரடி... அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட்ட மக்களின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி...!

By vinoth kumarFirst Published Apr 1, 2020, 12:05 PM IST
Highlights

 ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு என்ன நிலை என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும். நோயின் தீவிரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். 

ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம் அதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார். 

கொரோனா பீதியால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், உணவுகள் தரமாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து  சாந்தோம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து கலங்கரை விளக்கத்தில் உள்ள அம்மா உணவகத்திலும் முதல்வர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர், அங்கு சாப்பிட வந்திருந்தவர்களிடம் உணவின் தரம் குறித்து  கேட்டு அறிந்தார். பின்னர், அங்கு இட்லி வாங்கி சாப்பிட்டு உணவின் தரத்தை பரிசோதித்தார். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்;- டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் விவரம் தெரியாததால் அரசுக்கு தாங்களாகவே தகவல் தெரிவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். தாங்களாகவே முன் வந்து தகவல் அளித்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும். இஎம்ஐ வசூல் என்பது மத்திய அரசின் விவகாரம் என்பதால்,  மத்திய நிதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.  

மேலும், பேசிய அவர், ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு என்ன நிலை என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும். நோயின் தீவிரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம் அதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்றும் கூறியுள்ளார். 

click me!