ஸ்டாலின் போடும் அனைத்து பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றும் எடப்பாடியார்.. புகழ்ந்து தள்ளும் செல்லூர் ராஜூ..!

Published : Feb 06, 2021, 12:49 PM IST
ஸ்டாலின் போடும் அனைத்து பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றும் எடப்பாடியார்.. புகழ்ந்து தள்ளும் செல்லூர் ராஜூ..!

சுருக்கம்

ஸ்பின்னோ, ஃபாஸ்ட்டோ ஸ்டாலின் போடும் பந்துகளை சிக்ஸர்களாக மாற்றி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஸ்பின்னோ, ஃபாஸ்ட்டோ ஸ்டாலின் போடும் பந்துகளை சிக்ஸர்களாக மாற்றி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ்  விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் நோக்கில், ரூ. 12, 110 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால், 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுகின்றனர். முதல்வரின் இந்த அறிவிப்புக்க பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. 

ஆனால் இந்த அறிவிப்பை தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார் ஸ்டாலின். ஆனால் தேர்தலுக்கு முன்பே அதை முதல்வர் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். இதனால் தமிழகத்தில் ஸ்டாலின் சொல்வது தான் நடக்கிறது. இதனால் தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சி தான் என்று திமுகவினர் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  அமைச்சர் செல்லூர் ராஜூ;- முதல்வர் அனைத்து பந்துகளையும் சிக்ஸர் அடித்து வருவதால் மு.க.ஸ்டாலின் புலம்பி வருகிறார். முதல்வர் நடவடிக்கையால் ஸ்டாலின் என்ன செய்வது என தெரியாமல் திகைத்துள்ளார். திருவிளையாடல் படத்தில் தருமி புலம்புவது போல ஸ்டாலின் புலம்புவதாக என அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!