கேஸ் போடும் விளைவுகளை திமுக சந்திக்கும் …. எடப்பாடி கடும் எச்சரிக்கை !!

By Selvanayagam PFirst Published Sep 16, 2018, 6:57 AM IST
Highlights

டெண்டர் விடுவதில் திமுக  என்ன நடைமுறைகளை பின்பற்றியதோ அதைத்தான் அதிமுக அரசும் பின்பற்றுகிறது என்றும்,  இதற்காக திமுக நீதிமன்ற படியேறி இருக்கிறார்கள் இதன் விளைவுளை திமுக சந்திக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் தமிழக முதலமைச்சர்  அண்ணாதுரையின் 110-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகம், அமைதி பூங்காவாக திகழ்ந்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக திமுக, பொய் பரப்புரை செய்து வருகிறது. எம்.பி. பதவிக்காக, காவிரி நடுவர் மன்ற விவகாரத்தை திமுக கைவிட்டது. அக்கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ளோர், அதிகார போதையில் இருப்பதாக பழனிசாமி கூறினார்.

மேலும் அ.தி.மு.க ஐ.சி.யுவில் இருக்கிறது என ஸ்டாலின் சொல்கிறார். நாங்க எல்லாம் திடமாகத்தான் இருக்கிறோம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை நீங்கதான் லண்டன் போகிறீர்கள் என தனிப்பட் முறையில் தாக்கிப் பேசினார்.

 

இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று எத்தனையோ முறை போராட்டத்தை தூண்டிவிட்டார்கள். அது எடுபடவில்லை. இப்போது ஊழல் என்ற ஒன்றை கையில் எடுத்து இருக்கிறார்கள் என அவர் கூறினார்.

இன்று முதலமைச்சர் நெடுஞ்சாலைத்துறையிலே ஊழல் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை திமுகவினர் வைத்திருக்கிறார்கள். நீங்க என்ன நடைமுறைகளை பின்பற்றி டெண்டர் விட்டீங்களோ, அதே மாதிரிதானே நாங்களும் டெண்டர் விட்டிருக்கிறோம் என கூறிய எடப்பாடி பழன்சாமி, . இதற்காக திமுக  நீதிமன்ற படியேறி இருக்கிறார்கள். அதற்கான விளைவுளை அக்கட்சி சந்திக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.

click me!