"எந்த சாமி? முதல்வர் அய்யா எடப்பாடி பழனிச்சாமி" அர்ச்சனை விளம்பரத்தில் நடித்த மஹாலட்சுமி-க்கு நேர்ந்த கொடுமை பாருங்க...

 
Published : Apr 24, 2018, 11:34 AM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
"எந்த சாமி? முதல்வர் அய்யா எடப்பாடி பழனிச்சாமி" அர்ச்சனை விளம்பரத்தில் நடித்த மஹாலட்சுமி-க்கு நேர்ந்த கொடுமை பாருங்க...

சுருக்கம்

Edappadi Palanisamy Theatre Interval Ad Troll VJ Mahalakshmi

சுமார் ஒன்றரை மாத திரயுலாக ஸ்ட்ரைக் முடிந்த பிறகு திரையரங்கிற்கு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அது என்னன்னா? அரசு விளம்பரம் தான் காண்பிக்கபட்டது.

அதில், ஒரு பெண் அர்ச்சனை எனக்கு இல்லை, சாமிக்கு பண்ணுங்க..! என்பார். உடனே, எந்த சாமிக்கு என்று ஐயர் கேட்பார். அதற்கு அந்த பெண், எடப்பாடி பழனிச்சாமி ஐயாவுக்கு என்று பதிலளிப்பார். இந்த அரசு விளம்பரத்தில், சீரியல் நடிகையும், VJ-வுமான நடிகை மஹாலட்சுமி நடித்திருந்தார்.

இதனால் ரசிகர்கள் அவரை கேள்விகளால் துளைத்து எடுக்க ஆரம்பித்தனர். நாட்டுல எவ்வளவு பிரச்சனை போயிகிட்டு இருக்கு. இதையெல்லாம் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் இப்படி ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளீர்களே? இப்படியெல்லாம் நீ பண்ணலாமா? என்று கேட்டு நச்சரிதுள்ளனர்.

இந்நிலையில், இந்த விளம்பரத்தில் நடிப்பதற்கு முன்பு என்ன நடந்தது என்று அவரே அவருக்கு நடந்த கொடுமையை கண்ணீருடன் கூறியுள்ளார். ஆம், அந்த விளம்பரத்தில் அப்படி ஒரு வசனம் இருப்பதே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற பிறகு தான் அவருக்கே தெரியுமாம்.

என்ன செய்வது நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டோமே என அந்த விளம்பரத்தில் தவிர்க்க முடியமால் நடித்து விட்டு வந்தேன், அதுவும் அரசு விளம்பரம் என்பதால் நடிக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

ஆனாலும் சிலர், எம்ஜிஆர், ஜெயலலிதா, அவ்வளவு ஏன், உதயநிதி ஸ்டாலின் அளவுக்கு திரை பிரபலம் இல்லாத பின்னணியில் இருந்து வந்தவர். எனவே அதே திரை மூலம் தன்னை பிரபலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதில் தவறென்ன? கடவுள் என்பதுதான் கொஞ்சம் ஓவராக தெரிகிறது. மற்றபடி எடப்பாடி பழனிச்சாமி ரூட் சரிதான் என சொல்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை... கடைசியில் மண்டியிட்ட வங்கதேசம்..!
ஹமாஸை ஒழிப்பதில் நாங்களே தலைமை தாங்குவோம்.. அமெரிக்காவிடம் அடம்பிடிக்கும் பாகிஸ்தான் இராணுவம்..!