எதிர்க்கட்சிகள் போல், நாங்கள் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல. எதை சொல்கிறோமோ அதை செய்து முடிப்போம் என ரஜினி பாணியில் முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் போல், நாங்கள் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல. எதை சொல்கிறோமோ அதை செய்து முடிப்போம் என ரஜினி பாணியில் முதல்வர் பழனிச்சாமி பேசியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: அரசின் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பொய்யான விமர்சனம் செய்து வருகின்றன. ஆளுங்கட்சியை குறைகூறும் எதிர்க்கட்சிகள் நீர்நிலைகளை தூர்வாரினரா? கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சி காலத்தில் மேட்டூரில் இருந்து கடைமடை வரை தடுப்பணை கட்டவில்லை. கரூரில், காவிரி குறுக்கே விரைவில் தடுப்பணை கட்டப்படும். எதிர்க்கட்சிகள் போல், நாங்கள் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல. எதை சொல்கிறோமோ அதை செய்து முடிப்போம் என ரஜினி பாணியில் பதிலடி கொடுத்தார்.
எதிர்கட்சியினரின் பொய் பிரசாரங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு சாதனை படைத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் போதுமான அளவு தண்ணீர் அளிப்பதுதான் அரசின் முதல் கடமை என்றார். மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் ஏற்படும் சிரமங்களை போக்கவே, சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. சிறப்பு குறைதீர்ப்பு கூட்டத்தின் முக்கிய நோக்கம், மக்களை தேடி அதிகாரிகளை வரவழைப்பது தான்.
பொதுமக்களின் அனைத்து மனுக்களும் விடாமல் படித்து பார்த்து, தகுதி உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் உதவித்தொகை கேட்டு அதிக மனுக்கள் வருகின்றன. தகுதி உள்ள 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். விரைவில் 40 ஆயிரம் ஏரி, குளங்கள் படிப்படியாக தூர்வாரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.