ஸ்டாலினின் முதல்வர் கனவு குளோஸ்...?? சுக்குநூறாய் உடைகிறது திமுக கூட்டணி...?? செம்ம காண்டில் கம்யூனிஸ்ட்டுகள்...!!

By Ezhilarasan BabuFirst Published Sep 29, 2019, 12:27 PM IST
Highlights

திமுக சொல்வது உண்மைதான்  என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய  செயலாளர் டி ராஜா ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  திமுகவுடனான உறவை முறித்துக்கொள்ளும் ஆலோசனையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கம்யூனிஸ்டுகள்  எப்போதும் நேர்மையானவர்கள், கரைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர்கள் என்று  பெயரெடுத்த நிலையில், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை எல்லோரையும் போலத்தான் அவர்களும்  என்று சொல்லும் அலவிற்கு அவர்களின் பெயருக்கு தற்போது ஒரு கலங்கள் ஏற்பட்டுள்ளது, அதுவும் அவர்களின் கூட்டணி கட்சியான திமுகவாலேயே அது ஏற்பட்டுள்ளது . இதனால் திமுக மீது ஏக கடுப்பில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி. கூட்டணியை முறித்துக்கொள்ளும் யோசனையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சியின் சார்பில் செய்யப்பட்ட  கணக்கு வழக்கு செலவுகளை  ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து வருகின்றன.  அந்த கணக்குப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது  திமுகவிடம் 148 கோடி ரூபாய் இருப்பு இருந்தது,  பின்னர் தேர்தல் நன்கொடையாக 50 லட்சம் ரூபாய் பெறப்பட்டதாகவும் கணக்கு வைத்துள்ளது.  அதில் மக்களவை தேர்தலில் சுமார் 79. 6 கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்யப்பட்டுள்ளது.  அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மற்றொரு கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆகிய கட்சிகளுக்கு தலா 15 கோடி ரூபாய்,  மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டதாக திமுக தேர்தல் ஆணையத்தில் கணக்கு கூறியுள்ளது.

 

எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் முதல்முறையாக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல் ஆணையத்தில் திமுக  புள்ளி விவரங்களுடன்  தாக்கல் செய்திருப்பது, கூட்டணிக் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.   வழக்கமாக கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியை கூட்டணிக்கு தலைமேயேற்கும் கட்சிகள் எப்போதும் வெளியிடுவதில்லை. ஆனால் இந்த முறை திமுக அதை வெளியிட்டிருப்பது கூட்டணி கட்சிக்கு செய்துள்ள நம்பிக்கை துரோகமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் கம்யூனிஸ்டு கட்சிகளின்  மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பணத்தை பெற்றுக்கொண்டுதான் கம்யூனிஸ்ட்கள் திமுகவுடன் கூட்டணி வைத்தனர் என்று விமர்சிக்கப் பட்டு வந்த நிலையில், அதை உண்மையாக்கும் விதத்தில் திமுகவின் செயல்பாட்டுகள் அமைந்துள்ளது. இதனால்  திமுக மீது  கம்யூனிஸ்டுகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இதை வைத்து பலர்  கம்யூனிஸ்டு கட்சியை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் ,ஆமாம்,  திமுக சொல்வது உண்மைதான்  என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய  செயலாளர் டி ராஜா ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  திமுகவுடனான உறவை முறித்துக்கொள்ளும் ஆலோசனையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் சில கம்யூனிஸ்டு கட்சியினர், கம்யூனிஸ்டுகள் இத்தனைநாட்களாக மக்கள் மத்தியில் கட்டிக் காத்து வந்த நற்பெயருக்கு திமுகாவால் கலங்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிதி எதற்காக பெறப்பட்டது, அது எந்த வகையில் செலவு செய்யப்பட்டது. என நீண்ட விளக்கத்தை மக்களுக்கு வழங்க வேண்டிய தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு  கம்யூனிஸ்டுகள் தள்ளப்பட்டிருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். 

click me!