தொழிலே செய்யாமல் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்ற ஒரே கட்சி திமுக.. ஸ்டாலினை அசிங்கப்படுத்திய எடப்பாடியார்..!

By vinoth kumarFirst Published Nov 11, 2020, 4:58 PM IST
Highlights

விவசாயம் பற்றி தெரியாத ஸ்டாலினுக்கு எப்படி போலி விவசாயி, உண்மையான விவசாயி என தெரியும். எனக்கு விவசாயம் தெரியும். ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

விவசாயம் பற்றி தெரியாத ஸ்டாலினுக்கு எப்படி போலி விவசாயி, உண்மையான விவசாயி என தெரியும். எனக்கு விவசாயம் தெரியும். ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் ரூ.16 கோடி மதிப்பில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கருவியை இயக்கி தொடங்கி வைத்தார். அங்கு ரூ.71 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலான ஆய்வக கட்டிடத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதனையடுத்து, ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கு பின் முதல்வர் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான வசதிகள் உள்ளன. சுமார் 2.24 லட்சம் பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

விவசாயம் பற்றி தெரியாத ஸ்டாலினுக்கு எப்படி போலி விவசாயி, உண்மையான விவசாயி என தெரியும். எனக்கு விவசாயம் தெரியும். ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? விவசாயி என்ற சான்றிதழை அவர் தர தேவையில்லை. முதலமைச்சராக இருக்கும் போதும் கூட விவசாயத்தை தொடர்ந்து வருகிறேன். நான் சிறுவயது முதலே எவ்வளவு கடின உழைப்பாளி என்பது ஊர் மக்களை கேட்டால் தெரியும்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் வருவதற்கு ஸ்டாலின் தான் காரணம். ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கப்படும் என பேரவையில் ஸ்டாலின் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். எல்லாவற்றையும் திமுக செய்து விட்டு பழியை மட்டும் அதிமுக மீது போடுகிறார்கள் என முதல்வர் கூறியுள்ளார்.மேலும், நீர் மேலாண்மை திட்டத்தில் தேசியளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. நீர் பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. சென்னை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

click me!