தாழ்த்தப்பட்டோர் குறித்து பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை.! இறங்கி அடிக்கும் இபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Jul 5, 2023, 10:30 AM IST
Highlights

காவேரி நீர் விஷயத்தில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. கர்நாடகத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பிரச்சனையாக்கி வருகிறது. அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, அம்மா சட்டப் போராட்டம் நடத்தினார்கள். 

மேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20ம்  தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கான இலச்சினையை அதிமுக பொதுச் செயலாளர் தற்போது வெளியிட்டார். அப்போது, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய இபிஎஸ்;-  தமிழகத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சி அதிமுக. தொண்டர்கள் நிறைந்த கட்சி. சிலர் கட்சியை முடக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதிமுக உடையவும் இல்லை, சிதறவும் இல்லை. எங்களது கட்சியினர் அற்புதமாக உழைத்தனர். கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை தொண்டர்கள் நிரூபித்துள்ளனர். இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நனவாக்கி உள்ளோம். மதுரை எங்களது எழுச்சி மாநாடு அமையும். 

இதையும் படிங்க;- மாமன்னன் ஹீரோ தனபால்.... அப்போ அந்த சாதி வெறி பிடித்த வில்லன் எடப்பாடியா? பகீர் கிளப்பிய உதயநிதியின் டுவிட்

காவேரி நீர் விஷயத்தில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. கர்நாடகத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பிரச்சனையாக்கி வருகிறது. அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, அம்மா சட்டப் போராட்டம் நடத்தினார்கள். அதிமுகதான் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றோம். நாடாளுமன்றத்தில் 22 நாட்கள் குரல் கொடுத்தோம். அத்தனை நாட்களும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. காவேரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது காங்கிரஸ், திமுக  இணைந்துள்ளது. இந்தியா முழுவதும் ஒருங்கிணைப்பேன் என்று கூறும் முதல்வர் ஜூன் மாதம் கிடைக்க வேண்டிய தண்ணீரை பெறவில்லை. விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளனர். வேண்டும் என்றே திட்டமிட்டு காங்கிரஸ் சிவகுமார் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்தியை வெளியிட்டுள்ளார். அமைதியை குலைக்க இந்த உத்தரவை வெளியிட்டுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். இன்றைய முதல்வர் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது அநீதி, துரோகம் என விமர்சித்தார். 

இதையும் படிங்க;-  அமைச்சருக்கு வாய் மட்டும்தான்.. விடியா அரசின் கொடுமைகள்.! திமுகவை விளாசிய எடப்பாடி பழனிச்சாமி

மேலும், அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை சிறப்பாக இருந்தது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பாக செய்தோம். கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டோம். பிரதமர் காணொளி காட்சி மூலம் ஆய்வு செய்வார். தமிழ்நாடு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முதல் மாநிலம் என்று பிரதமர் புகழ்ந்தார். சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி தான் கொடுக்கிறார். மருத்துவத்துறை சீரழிந்துள்ளது. குழந்தையை பெற்றெடுத்த தாய்க்குத்தான் வலி தெரியும். உரிய முறையில் சிகிச்சை அளித்து இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. நிர்வாக திறமை இல்லாத அரசு என்பது உறுதியாகி இருக்கிறது. 

இதையும் படிங்க;- தமிழகத்தை தாண்டி தேர்தலில் போட்டியிடவே முடியாத திமுகவை கண்டு பாஜகவுக்கு பயமா? பங்கம் செய்யும் வானதி சீனிவாசன்

கடலூரில் சளிக்கு நாய்க்கடி ஊசி போட்டுள்ளனர். இந்த அரசு எவ்வளவு மோசமாக இருக்கிறது. திமுக ஆட்சியில் மூன்று மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. சரியாக நிர்வாகிக்காத அரசுதான் திமுக அரசு. எதிர்க்கட்சிகள் சொல்வதோ எடுத்துக் கொள்வதில்லை. 500 மாணவர்கள் சேர்க்க முடியவில்லை. மருந்துகள் வாங்கிவதிலும் குளறுபடி. கும்பகர்ண தூக்கத்தில் இருந்து எழ வேண்டும். மாமன்னன் படம் ஓடினால் என்ன? ஓடாவிட்டால் என்ன? அமைச்சருக்கு இதுவா முக்கியம். குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

குட்டி அமைச்சரின் மாமன்னன் திரைப் படம் எப்படி ஓடுது என்றுதான் ஊடகங்கள் கேக்கறிங்க? அந்த படம் ஓடினால் என்ன ஓடாவிட்டால் என்ன?  மாமன்னன் படமா வயிற்று பசிய போக்கும்? மளிகைப்  பொருட்கள் அனைத்தும் 70 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.  மாமன்னன் படம் தாழ்த்தப்பட்டோர் இடையே எழுச்சியை ஏற்படுத்தியதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் அது பொய். 

நான் முதலமைச்சராக இருந்தபோது பேரவைத் தலைவராக இருந்த அண்ணன் தனபால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது அவரை கீழே தள்ளி, அவரது  சட்டையை கிழித்து,  இருக்கையை உடைத்து ரகளையில் ஈடுபட்டு அவரது புனிதமான இருக்கையில் அமர்ந்தவர்கள் திமுகவினர். இவர்களா தாழ்த்தப்பட்டோருக்கு நல்லது செய்வார்கள்? தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த  அவர் மீதே நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் கொண்டு வந்து எங்களது இருக்கையின் அருகே அமர வைத்தனர் திமுகவினர். சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரே கட்சி அதிமுகதான் , தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி , உயர்நிலைக் காரணம் அதிமுகதான் என இபிஎஸ் கூறியுள்ளார்.

click me!