
சிவப்பு சுழல் விளக்கை பொறுத்த விஐபிக்களுக்கு அனுமதி கிடையாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடந்து குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் மட்டுமே சிவப்பு சுழல் விளக்கை பொறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அமைச்சர்கள் , மாநில முதல்வர்கள் என அனைவரும் தங்கள் வண்டியில் உள்ள சிவப்பு சுழல் விளக்கை வரும் மே 1 ஆம் தேதி முதல் பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது காரில் இருந்து சிவப்பு சுழல் விளக்கை தானே அகற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அமைச்சர்களும் காரில் இருந்து சுழலும் சிவப்பு விளக்கை அகற்றுவார்கள் என முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
பிரதமரின் கோரிக்கையை ஏற்று அதாவது, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று தானே தன் காரில் இருந்து சிவப்பு சுழல் விளக்கை அகற்றியதாக தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை மே 1 ஆம் தேதி முதல் தான் நடைமுறைக்கு வருகிறது . இருந்த போதிலும், 1௦ நாட்களுக்கு முன்னதாகவே , தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது காரில் இருந்து சிவப்பு சுழல் விளக்கை அகற்றினார் என்பது கூடுதல் தகவல் .