குற்றம் சொல்ல வேண்டிய நேரமா இது?... உயிரைக் காக்க வேண்டிய நேரம்... ஸ்டாலினை எகிறி அடித்த எடப்பாடி..!

By vinoth kumarFirst Published Apr 17, 2020, 2:25 PM IST
Highlights

 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதில்கூற வேண்டிய அவசியமில்லை. குற்றம் சொல்லும் நேரம் இதுவல்ல, இது உயிர் காக்கும் நேரம் என்று முதல்வர் கூறியுள்ளார். மருத்துவ வல்லுநர்கள் அறிவுரைகளின் படியே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து கட்சிக்கூட்டத்தை கூட்டி ஆலோசனை கேட்க இது ஒன்றும் அரசியல் பிரச்சனை அல்ல. மருத்துவ வல்லுநர்கள் அறிவுரைப்படி செயல்பட்டால்தான் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும். 

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சிகள் துணை நிற்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்த முதல்வர்;- தமிழகத்திற்கு வந்துள்ள 24,000 ரேபிட் டெஸ்ட் கருவிகளும் மாநில அரசால் வாங்கப்பட்டது. மத்திய அரசு 12,000 கருவிகளை வழங்கவதாக கூறியுள்ளது. ஆனால், 50,000 கருவிள் தேவை என்று கேட்டுள்ளோம் என்றார்.

மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதில்கூற வேண்டிய அவசியமில்லை. குற்றம் சொல்லும் நேரம் இதுவல்ல, இது உயிர் காக்கும் நேரம் என்று முதல்வர் கூறியுள்ளார். மருத்துவ வல்லுநர்கள் அறிவுரைகளின் படியே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து கட்சிக்கூட்டத்தை கூட்டி ஆலோசனை கேட்க இது ஒன்றும் அரசியல் பிரச்சனை அல்ல. மருத்துவ வல்லுநர்கள் அறிவுரைப்படி செயல்பட்டால்தான் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும். 

மக்கள் உயிரே முக்கியம், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு வாய்ப்பளிக்கவேண்டாம். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சிகள் துணை நிற்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். 

click me!