அழகான பொண்ணு இருந்தா ஆசைப்படத்தான் செய்வார்கள்... தேமுதிகவை திக்குமுக்காட வைக்கும் எடப்பாடி..!

By vinoth kumarFirst Published Mar 2, 2020, 11:40 AM IST
Highlights

நான், விவசாயியாக தான் வருமானவரியை தற்போது வரையில் கட்டி வருகிறேன். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும், முதல்- அமைச்சராக இருந்தபோதும் சரி, எப்போதுமே விவசாயியாக தான் வருமான வரியை கட்டி வருகிறேன். அதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் நான் விவசாயி என்பதை. மு.க.ஸ்டாலின் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது குரங்கு கதை கூறியது அவர் எண்ணங்கள் எவ்வாறு இருக்கிறது என்பதை காண்பிக்கிறது.

வீட்டில் பெண் இருந்தால் திருமணம் செய்ய கேட்பதைப்போல் கூட்டணி கட்சியினரும் சீட் கேட்கதான் செய்வார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை செல்வதற்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்;- ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து கட்டுமான பணிகளும் சிறப்பாக நடக்கும். நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழகத்தில் உள்ள அரசின் துறைகள் பற்றி எதுவும் தெரியாது. அவருக்கு தெரிந்தது சினிமா துறை மட்டும் தான். கிராமத்தில் கூறும் பழமொழிக்கு ஒப்பாக கமல்ஹாசன் பேசி வருகிறார்.

இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மருமகள்... நேரில் பார்த்த மாமியார்.. இறுதியில் நேர்ந்த கொடூரம்..!

நான், விவசாயியாக தான் வருமானவரியை தற்போது வரையில் கட்டி வருகிறேன். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும், முதல்- அமைச்சராக இருந்தபோதும் சரி, எப்போதுமே விவசாயியாக தான் வருமான வரியை கட்டி வருகிறேன். அதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் நான் விவசாயி என்பதை. மு.க.ஸ்டாலின் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது குரங்கு கதை கூறியது அவர் எண்ணங்கள் எவ்வாறு இருக்கிறது என்பதை காண்பிக்கிறது.

இதையும் படிங்க;- ஒப்பந்தமே போடல உங்களுக்கு எதுக்கு எம்.பி. சீட்டு..? பிரமேலதா ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட அதிமுக..!

ராஜகண்ணப்பனுக்கு அதிமுக தான் விலாசம் கொடுத்தது. அதிமுகவிற்கு துரோகம் நினைப்பவர்கள் விலாசம் இல்லாமல் போய்விடுவார்கள். தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி தந்த பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும், தேமுதிகவிற்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் வீட்டில் பெண் இருந்தால் திருமணம் செய்ய கேட்பதைப்போல் கூட்டணி கட்சியினரும் சீட் கேட்கதான் செய்வார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

click me!