தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்..! அரசு செய்த முன்னேற்பாடுகளை விளக்கிய முதல்வர்..!

Published : May 17, 2019, 01:54 PM IST
தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்..!  அரசு செய்த முன்னேற்பாடுகளை விளக்கிய முதல்வர்..!

சுருக்கம்

தமிழகத்தில் காலி குடங்களோடு மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார். காரணம் தண்ணீர் பஞ்சம். இதனால் தமிழக மக்கள் பணம் கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

தமிழகத்தில் காலி குடங்களோடு மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார். காரணம் தண்ணீர் பஞ்சம். இதனால் தமிழக மக்கள் பணம் கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

மதுரை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு முதல்வர்,“தமிழகத்தில் பெய்ய வேண்டிய பருவமழை சரியான நேரத்திற்கு பெய்யாமல் போனதுதான் இந்த தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம். ஆனாலும் கோடை காலத்தில் தமிழக மக்கள் தண்ணீருக்காக கஷ்டப்படகூடாது என்பதற்காக அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் இதை சரிசெய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் வறட்சியாக இருக்கும் இடங்களிலும் தண்ணீரானது மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுப்போக தேர்தலுக்கு முன்பே குடிநீர் தேவைகான நிதிகளை ஒதுக்கிவிட்டிருப்பதால் தண்ணீர் பிரச்சனைப் பற்றி மக்கள் கவலைப்பட தேவையில்லை” என சொல்கிறார் முதல்வர்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!