ஓபிஎஸ்ஸை பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லிவிட்டாரே தினகரன்? கலாய் கலாய் கலாய்த்த சம்பவம்...

Published : May 17, 2019, 01:20 PM ISTUpdated : May 17, 2019, 01:21 PM IST
ஓபிஎஸ்ஸை பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லிவிட்டாரே தினகரன்?  கலாய் கலாய் கலாய்த்த சம்பவம்...

சுருக்கம்

நாங்கள் பதவிக்காக அலைந்திருந்தால் பன்னீர்செல்வம் முதல்வர் ஆகியிருக்க முடியுமா? முதல்வராக்க அவர் என்ன பொருளாதார அறிஞரா என்று கேள்வி எழுப்பிய அவர் என திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் அனல் பறக்க பேசியுள்ளார் தினகரன்.

நாங்கள் பதவிக்காக அலைந்திருந்தால் பன்னீர்செல்வம் முதல்வர் ஆகியிருக்க முடியுமா? முதல்வராக்க அவர் என்ன பொருளாதார அறிஞரா என்று கேள்வி எழுப்பிய அவர் என திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் அனல் பறக்க பேசியுள்ளார் தினகரன்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நாளை மறுநாள் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடையவுள்ளது. திருப்பரங்குன்றம் அமமுக வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவாக அக்கட்சியின்  தினகரன் நேற்று தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இல்லிலையில் வடிவேல்கரையில் பேசிய அவர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். அதிமுக பக்கம் இருப்பவர்கள் டெண்டர் பார்ட்டிகள்தாம். தேர்தல் முடிவுகள் தெரிந்து அதிமுகவில் இருப்பவர்கள் துக்கத்தில் இருப்பதுபோல இருக்கிறார்கள். தினகரா உன்னைத் தெரியாதா என்று தற்போது எடப்பாடி  பேசுகிறார். அவர்தான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தொப்பி சின்னத்தில் எனக்குப் பிரச்சாரம் செய்தபோது, ‘தனக்கு பின்னால் நூறாண்டுகள் இந்த இயக்கம் இருக்கும் என்று ஜெயலலிதா சட்டப்பேரவையில் கூறியுள்ளார். அதற்காக ஜெயலலிதா விட்டுப் போனவர்தான் தினகரன் என்று பேசியிருந்தார். ஆனால், தற்போது தினகரன் 10 வருடங்கள் எங்கே போனார் என கேட்கிறார். அவர்களைப் போன்ற துரோகிகளின் சதி காரணமாக வெளியிலிருந்தேன். கட்சியைக் காப்பாற்ற வேண்டிய கடமை வந்ததால் திரும்பவும் வந்தேன் என்றார்.

நாங்கள் பதவிக்காக அலைந்திருந்தால் பன்னீர்செல்வம் முதல்வர் ஆகியிருக்க முடியுமா? முதல்வராக்க அவர் என்ன பொருளாதார அறிஞரா என்று கேள்வி எழுப்பிய அவர், எதிர்க்கட்சியான திமுகவையும் துரோகியான அதிமுகவையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.  

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!