எம்ஜிஆர், கருணாநிதி, ஜெ.,வை மிஞ்சிய எடப்பாடி!! தமிழக மக்களுக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்... செம்ம ஆப்பும் ரெடி!!

By sathish kFirst Published Feb 18, 2019, 1:43 PM IST
Highlights

தமிழக மக்களின் வறுமை நிலைய கூறி வறட்சி என்ற பெயரில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய் 2000 கொடுப்பதாக அறிவித்த எடப்பாடி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட முன்னால் முதல்வர்களை மிஞ்சிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளாராம் எடப்பாடியார். 
 

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து எந்த மாநில அரசுகளும் அறிவிக்காத ஒரு திட்டம் மக்களுக்கு பணம் கொடுப்பது. மக்களின் வறுமை நிலைய கூறி வறட்சி என்ற பெயரில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய் 2000 என தமிழக மக்களுக்கு குறிப்பாக 60 லட்சம் குடும்பத்திற்கு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததோடு, அவரவர் வங்கி கணக்கில் இம்மாத இறுதிக்குள்ளேயே செலுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமாக  அறிவித்துவிட்டார் எடப்பாடி. இந்த செயலை எதிர்க்கட்சிகள், கண்டிப்பதோடு, இது ஓட்டுக்கு பணம் கொடுக்கும் சட்டபூர்வமான நடவடிக்கை என விமர்சனம் செய்துள்ளனர். 

இதையெல்லாம் கண்டு அசராத, அஞ்சாத முதல்வர் எடப்பாடி முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதாவை ஓரங்கட்டிவிட்டு வேற லெவலில் பிளான் போட்டு வருகிறாராம். அதாவது மற்றொரு  திட்டமாக ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 10000 கொடுக்க போகிறார் என அதிமுகவின் கொங்கு மண்டல முக்கிய புள்ளி ஒருவர் முன்னணி புலனாய்வு வார இதழுக்கு எடப்பாடியின் ரகசியத்தைக் கூறியிருக்கிறார்.

 வங்கிகள் மூலம் ஒரு குடும்பத்திற்கு கடனாக  10000 கொடுப்பதுதான். இந்த கடன் தொகையில் அரசு 10 சதவிகிதம் மானியம் தரும். மீதி தொகையை நீண்ட கால கடனாக பயனாளிகள் திருப்பி செலுத்த வேண்டும். இந்த கடனை கொடுக்கும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்ல. இதை மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள். இந்த திட்டத்தை அடுத்த மாதம் அறிவிக்க இருக்கிறார்  எடப்பாடி. ஒருவேளை எதிர்க்கட்சிகளுக்கு தெரிந்துவிட்டால் இதற்கு மாற்று ஏற்பாடாக ஒரு குடும்பத்திற்கு 10000 எந்த அடிப்படையில் கொடுக்கலாம் என்று  அதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம்.

மக்களுக்கு வங்கியின் மூலம் கொடுக்கப்படும் தொகை மாநில அரசின் சிறப்பு நிதியிலிருந்தோ அல்லது மத்திய அரசிடம் பெற்றோ வங்கிகளுக்கு வழங்கப்படலாம், சுமார் 60 லட்சம் குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ.2000, அடுத்ததாக  வழங்கப்படும் ரூ.10000 கொடுப்பதெல்லாம் வெறும் ஓட்டுக்காக மட்டுமே என்பதால், இந்த  பிளானை  செயல்படுத்த  இருக்கிறாராம் எடப்பாடி. அதுமட்டுமல்ல, பேங்கில் கடன் வாங்கிய வாக்காளர்கள் ஓரிரு மாதங்களில் தேர்தல் முடிந்த பிறகு திருப்பி செலுத்தவில்லை என்றால் அதை அந்த வங்கிகள் பார்த்துக்கொள்ளும். தேர்தலில் ஜெயித்துவிட்டால் மொத்தக் கடனும் தள்ளுபடி... எப்படி பிளான்?

click me!