
அதிமுக அம்மா அணியின் எம்எல்ஏக்ளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தலைமைச் செயலகத்தில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்போது . டிடிவி தினகரனுக்கு நெருக்கமான எம்.எல்.ஏக்களையும் சந்தித்து சமாதானப்படுத்த எடப்பாடி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் மிகுந்த அ,சச உணர்வுடன் செயல்பட்டு வந்தனர். ஆனால் அவரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்கு யார் தலைமை, யார் சொல்வதை யார் கேட்பது ? போன்ற சூழ்நிலைதான் உருவாகியுள்ளது.
ஏற்கனவே அதிமுக இரண்டாக உடைந்த நிலையில், நேற்று டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பது என தமிழக அமைச்சரவை கூடி முடிவெடுத்து அறிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த தினகரன் ஆதரவு 13 பேர் தனி அணியாக பிரிந்து செயல்படத் தொடங்கியுள்ளனர். இது தவிர பல எம்எல்ஏக்கள் தங்கள் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி முதலமைச்சர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.
இதே நிலை நீடித்தால் ஆட்சி கவிழ்ந்து விடும் ஆபத்து உள்ளது என்பதை அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏக்கள் அனைவரையும் தனித்தனியான நேரில் சந்தித்து குறைகளை கேட்க உள்ளதாக தெரிகிறது.
‘இதற்காக 3 நாட்கள் ஒதுக்கியுள்ளதாகவும், அப்போது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களையும் சந்தித்து சமாதானப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.