சாட்டையை சுழற்றப்போகும் எடப்பாடி... பீதியில் அமைச்சர்கள்..!

Published : Jun 06, 2019, 12:50 PM ISTUpdated : Jun 06, 2019, 12:58 PM IST
சாட்டையை சுழற்றப்போகும் எடப்பாடி... பீதியில் அமைச்சர்கள்..!

சுருக்கம்

அதிமுகவில் அமைச்சர்களில் பெரும்பாலோனோர் மாவட்ட செயலாளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை அடுத்து அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை சரிக்கட்ட முதல்வர் பழனிச்சாமி முடிவு செய்துள்ளார்.

அதிமுகவில் அமைச்சர்களில் பெரும்பாலோனோர் மாவட்ட செயலாளர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை அடுத்து அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை சரிக்கட்ட முதல்வர் பழனிச்சாமி முடிவு செய்துள்ளார்.

  

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளாக பாமக, பாஜக, தேமுதிக கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்தன. ஆனால் மக்களவை தேர்தலில் பாஜக 5 இடங்களில் போட்டியிட்டது. இந்த 5 இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் 2 லட்சம் முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தனர். தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, குமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா ஆகியோர் போட்டியிட்டவர்களில் முக்கியமானவர்கள். இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற நிலை இருந்தது. இந்த தோல்விக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்காக வேலை செய்யவில்லை என்ற அதிமுக தலைமைக்கு புகார் தெரிவித்தனர். 

முக்கியமாக கன்னியாகுமரியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எச்.வந்தகுமாரிடம் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் படுதோல்வி அடைந்தார். இதற்கு முக்கிய காரணம் அதிமுக மேல்மட்ட நிர்வாகிகள்தான் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டை கூறி வந்தனர். இதனையடுத்து மேலிடத்தில் இருந்து அதிமுக நெருக்கடி கொடுத்து வருவதால் மாவட்ட செயலாளர்கள் மாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகனை நீக்கிவிட்டு மாவட்ட மருத்துவ அணி செயலாளராக உள்ள டாக்டர் சி.என்.ராஜதுரைக்கு நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இதனிடையே அதிமுகவில் மொத்தம் 50 மாவட்ட செயலாளர்கள் உள்ளன. இதில் பெரும்பாலானோர் அமைச்சர்களே, மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். அதிமுக படுதோல்வியை அடுத்து, அமைச்சர் பதவி அல்லது மாவட்ட செயலாளர் பதவி என இதில் ஏதாவது ஒரு பதவியை மட்டும் வழங்க கட்சி தலைமை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்குள் அதிமுக கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு சரிகட்ட முதல்வர் எடப்பாடி தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!